முகப்பு /மதுரை /

மதுரையில் குழந்தைகளை கவர்ந்திழுக்கும் ஈகிள் பார்க் சென்றிருக்கீர்களா?

மதுரையில் குழந்தைகளை கவர்ந்திழுக்கும் ஈகிள் பார்க் சென்றிருக்கீர்களா?

X
மதுரை

மதுரை ஈகிள் பார்க்

Madurai | மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள ஈகிள் பூங்காவில் பல்வேறு வகையான விளையாட்டு தளங்கள் இருக்கின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் சமீப காலமாக பல பொழுதுபோக்கு இடங்கள் பிரபலமாகி வருகின்றது.

அந்த வகையில் நாம இன்னைக்கு பார்க்க போற இடம் தான் மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் உள்ள ஈகிள் பார்க்.இந்த ஈகிள் பார்க்கின் நுழைவாயிலில் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த ஸ்டூடியோவில் குழந்தைகளுக்காகவே கார்ட்டூன் கேரக்டர் பொம்மைகள், அனிமல்ஸ் போன்ற உயரமான பொம்மைகளில் லைட் செட்டப் செய்து கிட்ஸ் சாங்ஸ் போட்டு,கண் கவரும் வகையில்இந்த ஸ்டூடியோவை தயார் செய்து இருக்கின்றார்கள்.

ஈகிள் பார்க்

அப்படியே உள்ளே சென்றால்குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைக்கடைகளும் பிரம்மாண்டமான உலகம் என்ற ஷோவும், துப்பாகிகள் விளையாட்டு, பெரிய பெரிய ராட்டினங்கள், பால்ஸ் கேம், வாட்டர் போட்டிங், ஜம்பிங் பவுன்ஸ என பெரியவர் முதற்கொண்டு சிறியவர்கள் வரை பல்வேறு வகையான விளையாட்டு தளங்களும் இங்கு இருக்கின்றன.

ஹே.. எப்புட்றா.... கண்ணாடி பாட்டினுள் தேங்காய் ஓட்டில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்

இதுபோக காலிஃப்ளவர், மும்பை அப்பளம், ஐஸ்கிரீம் என பலவிதமான தின்பண்டங்களும் விற்கப்படுகின்றது.விடுமுறை நாட்களில் குழந்தைகள், முதியவர்கள், பெரியவர்கள் என இந்த பார்க்கில் கூட்டம் அலைமோதுகின்றது. இந்தப் பார்க்கிற்கு நுழைவு கட்டணமாக 40 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.

First published:

Tags: Local News, Madurai