முகப்பு /மதுரை /

குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் மதுரை ஈகோ பார்க்.. மதுரைவாசிகள் கவலை!

குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கும் மதுரை ஈகோ பார்க்.. மதுரைவாசிகள் கவலை!

X
மதுரை

மதுரை ஈகோ பார்க்

Madurai echo park | மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில் இருக்கக்கூடிய மாநகராட்சிக்கு சொந்தமான சுற்றுச்சூழல் பூங்காவான இகோ பார்க் தற்போது பராமரிப்பு இன்றி பெரிய குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கின்றது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை ஈகோ பார்க் குப்பை கிடங்கு போல் காட்சியளிப்பதால் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள குழந்தைகள் அனைவருக்கும் செல்போன், கேம்ஸ், கம்ப்யூட்டர் என்று பொழுதுபோக்கு விளையாட்டுத்தலங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இதற்கு முன்னர்ஓடியாடி திரிந்து விளையாட்ட, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விடுமுறை நாட்களில் நம்முடைய பெற்றோர்களை அழைத்துக்கொண்டு முதலில் பார்க்கிற்கு ஓடுவது வழக்கம். அப்படி மதுரைமக்கள் ஓடக்கூடிய பார்க்குகளில் ஒன்று தான் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஈகோ பார்க்.

ஒரு காலத்தில் இந்த பார்க்கில் நீர் ஊற்றுகள், மியூசிக்டான்ஸ், வாட்டர் பாட்டில், ஊஞ்சல்கள் என எல்லாம் இருந்தன.இதற்காகவே விடுமுறை நாட்களில் இந்த பார்க்கில் குழந்தைகளின் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்பொழுது இந்த பார்க்கில் மியூசிக் டான்ஸ் பழுது ஆகி வாட்டர் பாட்டில் தண்ணீர் இல்லாமல், சறுக்குகள் எல்லாம் ஆங்காங்கே உடைந்து, பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன.

தற்போது இந்த பார்க்கில் குழந்தைகளின் கூட்டம்எல்லாம் ஓய்ந்து, பெரியவர்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதற்காக மட்டுமே இந்த பார்க்கிற்குகாலை மற்றும் மாலை வேளைகளில் வருகின்றார்கள்.

ஆனாலும் 20 ஏக்கர் பரப்பளவில் இருக்கக்கூடிய இந்த பார் முழுவதும் மரங்கள் நிறைந்த நந்தவனமாக இருந்த நிலையில், தற்போது இந்த மரங்களில் இருந்து விழும் இலைகள்எல்லாம் இந்த பார்க்கில் பராமரிப்பு இன்றி ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மாநகராட்சி அப்புறப்படுத்தாத காரணத்தினால் தற்பொழுது இந்த பார்க் ஒரு பெரிய குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கின்றது.

top videos

    இதனாலே இந்த பார்க்கிற்கு நடைப்பயிற்சி உடற்பயிற்சி செய்ய வரும் பெரியவர்களும் தற்பொழுது இந்த பார்க்கிற்கு வருவதை குறைத்துள்ளனர்.பூச்சிகள் கொசுக்கள் நிறைந்த இந்த பார்க்கை பராமரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கிளையில் பொதுநல மனு ஒன்றதாக்கல் செய்யப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Madurai, Park