ஹோம் /மதுரை /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மதுரை மாவட்டம் தெப்பக்குளம், எஸ்.எஸ் காலணி துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

  நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மோகன் அறிவித்துள்ளார்.

  மின்தடைப் பகுதிகள்:

  தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்.ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிஸ்சர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் ஒன்று முதல் ஆறுவரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிக்காரத்தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி. ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சி அவன்யூ மற்றும் திருமகள் நகர் உள்ளிட்ட பகுதிகள்.

  அனுப்பானடி மற்றும் தெப்பம் ஆகிய துணை மின் நிலையங்கள்:

  மின் தடை பகுதிகள்:- ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகள்.

  எஸ்.எஸ்.காலனி துணை மின் நிலையம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

  மின் தடை ஏற்படும் பகுதிகள்:

  மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவிநகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யாநகர், சொரூப், பெரியார் நகர், மல்லிகை காடன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள் நகர், காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், இ.பி. காலனி. வானமாமலைநகர், வேல்முருகன் நகர், துரைச்சாமி நகர், ராம் நகர், அருள் நகர், சிருங்கேரிநகர், பைபாஸ் ரோடு, அரிஸ்டோ மருத்துவமனை, சத்யமூர்த்தி நகர், வ.உ.சி தெரு, நேரு நகர், போடிலைன், கிரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட், ஜெய் நகர், தாணத்தவம் ரோடு, மீனாட்சி நகர், அனீஸ் கான்வென்ட், ராஜம் நகர், ராகவேந்திராநகர், எம்.எம். நகர் உள்ளிட்ட பகுதிகள்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Madurai