ஹோம் /மதுரை /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்..

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்..

மின் தடை

மின் தடை

Madurai : மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை மாவட்டத்தில் வண்டியூர், அரசரடி, அவனியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை ( 25-11-2022) மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கீழ்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  வண்டியூரில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை:

  எல்.கே.டி. நகர், விரகனூர், கோழிமேடு மற்றும் சுற்றுவட்ட பகுதிகள்.

  அரசரடியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை :

  சொக்கலிங்க நகர் தெருக்கள், ஜவகர் மெயின்ரோடு, வடக்கு பார்த்தசாரதி தெரு, பைபாஸ் ரோடு, நாவலர் நகர், பாரதியார் மெயின்ரோடு, அவனியுத் தெரு, டி.எஸ்.பி. நகர்.

  அவனியாபுரத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை:

  மல்லிகை வீடுகள், பைபாஸ்ரோடு, பீகாக் சிட்டி மற்றும் சுற்றுவட்ட பகுதிகள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Local News, Madurai, Powercut