Home /madurai /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் சேந்தமங்கலம் பீடர், விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் கொடிக்குளம் பீடர், சமயநல்லூர் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) 13 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் சேந்தமங்கலம் பீடர், விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் கொடிக்குளம் பீடர், சமயநல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    உஅன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் சேந்தமங்கலம் பீடர், விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் கொடிக்குளம் பீடர், சமயநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்ற தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்தகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகபட்டி, காடுபட்டி, கொடிக்குளம், திரவியம்பட்டி, ஜோதி மாணிக்கம், பரவை ஏ.ஐ.பி.இ.ஏ.காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், சந்தோஷ் நகர், வித்யா வாகினி அபார்ட்மெண்ட், மங்கையர்கரசி கல்லூரிபகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி