Home /madurai /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sholavandan, India
    மதுரை மாவட்டம் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) 7ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரை மாவட்டம் சோழவந்தான் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: இரும்பாடி, தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் நிலையம், சமயநல்லூர், ஊர்மெச்சிகுளம், வளர்நகர், பாத்திமா நகர், தேனூர் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி