ஹோம் /மதுரை /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை மாவட்டத்தில் உறங்கான்பட்டி, நரசிங்கம்பட்டி, நாட்டாா் மங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய் கிழமை) 6ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  மதுரை மாவட்டத்தில் உறங்கான்பட்டி, நரசிங்கம்பட்டி, நாட்டாா் மங்கலம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

  அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  ஆகையால், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை உறங்கான்பட்டி, நரசிங்கம்பட்டி, நாட்டாா் மங்கலம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு. ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, இளமனூா், வரிச்சியூா், ஓடைப்பட்டி, களிமங்கலம், சக்குடி, விளத்தூா், ராஜாக்கூா், சக்கிமங்கலம், காா்சேரி,

  குன்னத்தூா்.

  நாட்டாா்மங்கலம், தச்சனேந்தல், செங்கோட்டை, இஸ்லானி, மீனாட்சிட்புரம், செவல்பட்டி,சுப்பிரமணியபுரம், கொட்டாட்ங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Madurai