ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டம் முழுவதும் அக்.2ம் தேதி கிராம சபை கூட்டம்!

மதுரை மாவட்டம் முழுவதும் அக்.2ம் தேதி கிராம சபை கூட்டம்!

மதுரை

மதுரை

Madurai District Gram Sabha | காந்தி ஜெயந்தியை யொட்டி வரும் அக்டோபர் 2ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (ஞாயிற்றுக் கிழமை) கிராம சபை கூட்டம்  நடக்க இருக்கிறது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

காந்தி ஜெயந்தியையொட்டி வரும் அக்டோபர் 2ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்க இருக்கிறது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இதையும் படிங்க ; மதுரை மாநகரில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களின் சிறப்புகள் தெரியுமா?

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், 2022-23ம் ஆண்டு பயனாளிகள் விவரங்கள் கிராம சபையில் ஒப்புதல் பெறுதல் போன்ற கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொதுமக்கள் கிராம சபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai