ஹோம் /மதுரை /

Madurai | ஆனையூரில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

Madurai | ஆனையூரில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாவட்டம் ஆனையூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரை மாவட்டம் ஆனையூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட இருக்கின்றது.

  ஆகையால், காலை 9 முதல் மதியம் 2 மணி வரை ஆனையூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி நகர், வி.எம்.டபிள்யூ காலனி, ரெயிலார் காலனி, சங்கீத் நகர், சொக்கலிங்கம் நகர், கூடல்நகர் 1 முதல் 15 தெருக்கள், வானொலி நிலைய மெயின்ரோடு, செல்லையா நகர், ஆனையூர் செக்டார் (1 மற்றும் 2), ஜெ.ஜெ. நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்கபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Madurai