Home /madurai /

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது மதுரை மாநகராட்சி இணையதளம் 

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது மதுரை மாநகராட்சி இணையதளம் 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக முடங்கியிருந்த மதுரை மாநகராட்சியின் இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    கடந்த இரண்டு நாட்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை மாநகராட்சியின் இணையதளம் முடங்கியிருந்ததால் பொதுமக்கள் மாநகராட்சி சேவைகளை பெற முடியாமல் தவித்தனர்.

    மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், http://www.maduraicorporation.co.in என்ற மாநகராட்சியின் இணையதளமும் வேறு வடிவத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.

    அதன்படி, நீண்ட காலமாக ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருந்து இணையதளம், சமீபத்தில் புதுப் பொலிவுடன் மாற்றப்பட்டது. முகப்பில் ‘மாமதுரை போற்றுதும்’ என்ற வாசகம் பின்னணியில் மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகால், சமண சின்னங்கள், காந்தி மியூசியம் ஆகிய படங்களின் ‘சிலைடு ஷோ’ ஓடுவது போன்று மாற்றப்பட்டன.

    அத்துடன், கீழே வைகை வட கரையிலிருந்து மதுரையை சித்தரிக்கும் 18ஆம் நுாற்றாண்டின் கருப்பு, வெள்ளை ஓவியம் இடம் பெற்றுள்ளன. அதற்கு இடதுபுறம் முதலமைசச்சரின் படமும், வலதுபுறம் மேயரின் படமும் இடம் பெற்றுள்ளன. வரி செலுத்துதல், பிறப்பு, இறப்பு பதிவு, அறிவிப்புகள், ஒப்பந்தம் ஆகியவற்றிற்கான லின்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், புகைப்படத் தொகுப்பு, மாநகராட்சி பற்றிய விவரங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு உள்ள மதுரை மாநகராட்சியின் இணையதளம் கடந்த இரண்டு நாட்களாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியிருந்து. அதனை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி இணையதளம் திடீரென முடங்கியதால், கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் மாநகராட்சி தொடர்பான இணைய சேவைகளை பெற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மதுரை மாநகராட்சி இணையதளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி