முகப்பு /செய்தி /மதுரை / குப்பை தொட்டியில் விதிகளை மீறி மருத்துவ கழிவுகள்.. மதுரை தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதிப்பு..!

குப்பை தொட்டியில் விதிகளை மீறி மருத்துவ கழிவுகள்.. மதுரை தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதிப்பு..!

மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு அபராதம்

மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு அபராதம்

Madurai | மதுரையில் மருத்துவ கழிவுகளை விதிமீறி பொது குப்பை தொட்டியில் கொட்டி நோய்த்தொற்று அபாயம் ஏற்படுத்திய தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் மருத்துவ கழிவுகளை விதிமீறி பொது குப்பை தொட்டியில் கொட்டி நோய்த்தொற்று அபாயம் ஏற்படுத்திய பிரபல தனியார் மருத்துவமனைக்கு 75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசரடி பகுதியில் இயங்கி வரும் தேவகி ஸ்கேன்ஸ் என்ற பிரபல தனியார் மருத்துவமனை, அதன் மருத்துவ கழிவுகளை அருகிலுள்ள மாநகராட்சி பொது குப்பை தொட்டியில் கொட்டுவதாக பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.

மாநகராட்சி நகர் சுகாதார அலுவலர் வினோத் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து, மருத்துவமனையின் மருந்து சீட்டுகளுடன் கிடந்த ஊசிகள், டியூப்கள், கையுறைகள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தினர்.

மருத்துவ கழிவுகளை சம்பந்தப்பட்ட ஏஜன்சிகளிடம் ஒப்படைத்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தாமல், மக்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குப்பை தொட்டியில் வீசிய குற்றத்திற்காக ரூபாய் 75,000 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினர்.

Also see... மதுரை சித்திரைத் திருவிழா... பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்... நெகிழ்ச்சி சம்பவம்...!

top videos

    இதே போன்று மாநகராட்சி முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு செய்து விதிமீறி செயல்படும் நிர்வாகங்கள் மீது கடும் சட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நகர் சுகாதார அலுவலர் வினோத் எச்சரித்துள்ளார்.

    First published:

    Tags: Madurai, Medical Waste