Home /madurai /

மதுரை மாநகராட்சியில் நாளை குறைதீர் கூட்டம்- பொது மக்களுக்கு அழைப்பு

மதுரை மாநகராட்சியில் நாளை குறைதீர் கூட்டம்- பொது மக்களுக்கு அழைப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாநகராட்சி சார்பில் நாளை குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்காகன பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில் பொது மக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நாளை கிழக்கு மண்ட அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டமானது, காலை 10 மணி முதல் 12.30 வரை நடக்கிறது. இந்த, பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயா், ஆணையா் ஆகியோா் தலைமையில் நடக்கிறது.

    மண்டலம் 1 கிழக்கு பகுதிக்கு உள்பட வாா்டு பகுதிகள்: வாா்டு 3- ஆனையூா், வாா்டு 4- பாா்க்டவுன், வாா்டு 5- நாகனாகுளம், வாா்டு6- அய்யா் பங்களா, வாா்டு 7- திருப்பாலை, வாா்டு 8- கண்ணனேந்தல், வாா்டு 9- உத்தங்குடி, வாா்டு 10- கற்பக நகா், வாா்டு 11 பரசுராம்பட்டி,
    வாா்டு 12- லூா்துலூா் நகா், வாா்டு 13- ஆத்திக்குளம், வாா்டு 14- கோ. புதூா், வாா்டு 16- வள்ளுவா் காலனி, வாா்டு 17- எஸ்.ஆலங்குளம், வாா்டு 18- அலமேலு நகா், வாா்டு 19- கூடல்நகா், வாா்டு
    36- மேலமடை, வாா்டு 37- பாண்டிகோவில், வாா்டு 38- சௌ ராஷ்ட்ராபுரம், வாா்டு 39-தாசில்தாா் நகா், வாா்டு 40- வண்டியூா் ஆகிய வாா்டுகளைச் சேர்ந்த பொது மக்கள் குறைதீா்
    முகாமில் பங்கேற்று குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி