ஹோம் /மதுரை /

மதுரை கோப்புதூர் சிஎஸ்ஐ கலை கல்லூரியில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய மாணவிகள்

மதுரை கோப்புதூர் சிஎஸ்ஐ கலை கல்லூரியில் ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய மாணவிகள்

X
பொங்கல்

பொங்கல் கொண்டாட்டத்தில் மாணவிகள்

Madurai Pongal Celebration | பாரம்பரிய விளையாட்டான உரியடி சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், தண்ணீர் பாட்டில் என பல்வேறு விளையாட்டு போட்டியை மாணவிகளுடன் ஆசிரியர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை கோப்புதூர் பகுதியில் சிஎஸ்ஐ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். 

பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பல்வேறு கல்லூரிகளிலும் மாணவ மாணவிகள் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர். மதுரை கோப்புதூர் பகுதியில் சிஎஸ்ஐ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தமிழர்களின் விழாவான பொங்கல் திருநாளை அனைத்து மாணவிகளும் மதங்களைக் கடந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

பாரம்பரியமான பொங்கல் திருநாளை அனைத்து மாணவிகளுக்கும் உணர்த்தும் வகையில் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் இணைந்து பொங்கலிட அனைத்து மாணவிகளும் பொங்கலோ பொங்கல் எனக் கூறி மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் அனைவரும் இணைந்து சினிமா பாடல்களுக்கு குஷியாக குத்தாட்டம் போட்டனர். மேலும் பாரம்பரிய விளையாட்டான உரியடி சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், தண்ணீர் பாட்டில் என பல்வேறு விளையாட்டு போட்டியை ஆசிரியர்கள் சக மாணவிகளுடன் இணைந்து பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

First published:

Tags: Local News, Madurai, Pongal 2023