மதுரை ஆவின் நகர் பகுதியில் அமைந்துள்ள இடம் தான் ராஜா பால் பண்ணை. இந்த பால் பண்ணை சுமார் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் துணை பேராசிரியராக இருக்கும் அசார் தனது அப்பாவுடன் சேர்ந்து இந்த பால்பண்ணையில் சுமார் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த மாடுகளுடன் செயல்பட்டு வந்த இந்த பால்பண்ணையில் தற்போது 40 மாடுகள், 20 ஆடுகள், 100 கோழிகளுடன் செயல்படுகிறது. இங்குள்ள மாடுகளுக்கு தீவனங்கள் திருமங்கலம் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
மாடுகளுக்கு தினமும் சத்தான உணவுகள் கொடுக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் அடர் தீவனமான தண்ணீரில் உளுந்து, தவுடு, குச்சி, கம்பு, சோளம், புண்ணாக்கு போன்றவற்றை கலந்தும் பசுமை தீவனமான சோள நாத்துக்களையும், உலர் தீவனமாக வைக்கோல் என 3 வகையான தீவனங்களையும் கொடுத்து வருகின்றனர். மேலும் பால்பண்ணை வைப்பது பற்றி இளைஞர்களுக்கு துணை பேராசிரியர் கூறியதாவது, “பண்ணையை பொறுத்தவரையில் உழைக்க வேண்டும். குடும்பத்தோடு சேர்ந்து கடுமையாக உழைத்தால் அதிக லாபத்தை ஈட்ட முடியும். 30 மாடுகள் இருந்தால் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும்.
இதைவிட அதிகமான லாபம் பெற வேண்டும் என்றால் சொந்தமாக விவசாய நிலம் இருந்தால் அதில் உலர் தீவனம், பசுமை தீவனம் ஆகியவற்றை கொள்முதல் செய்வதன் மூலம் தீவனங்களின் செலவு குறைவதால் இன்னும் லாபத்தை பெற முடியும். இப்போதுள்ள இளைஞர்கள் இந்த தொழிலை செய்தால் நல்ல ஒரு முன்னேற்றத்திற்கு போகலாம். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai