Home /madurai /

மதுரையைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மதுரையைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாத்துறை விருதுகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலாத் துறை சார்பில் வழங்கப்படும் விருதுகளுக்கு செப்டம்பர் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

    துருக்கியில் 1997-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003-ல் பீய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

    உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்குகிறது. இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும்,
    மாநிலத்தில் சுற்றுலா தொடா்புடைய செயல்பாடுகளைச் செயல்படுத்தும் சுற்றுலாத் தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும்.

    இந்த விருதுகள், சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

    மேலும், பள்ளி கல்வி நிறுவனங்கள் உட்பட 15 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும். இந்த விருதானது உலக சுற்றுலா தினமான செப்டம்பா் 27-ம் தேதி சென்னையில் வழங்கப்படும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை tntourismaward.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் செப்டம்பம்ர் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மதுரை கலெக்டர் எஸ். அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி