Home /madurai /

சமூக நீதிக்கு பாடுபட்டவர்களுக்கு பெரியார் விருது- மதுரை ஆட்சியரின் அறிவிப்பு

சமூக நீதிக்கு பாடுபட்டவர்களுக்கு பெரியார் விருது- மதுரை ஆட்சியரின் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழக அரசால் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்து மதுரை ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பிக்கும் வகையில், தந்தை பெரியார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுவோர்க்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    இந்த விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பத்தினை ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

    சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 2022-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.10.2022 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி