முகப்பு /மதுரை /

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. இந்த திட்டத்திற்கெல்லாம் கடனுதவி!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. இந்த திட்டத்திற்கெல்லாம் கடனுதவி!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai loan | கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் யாருக்கெல்லாம் கடன் வழங்ப்படும் என தெரிந்துகொள்ளலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் தொழில் முனைவோர் தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பால் படுத்தப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், இன மேம்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் இனப்பெருக்கப்பண்ணை, கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிக்கும் ஆலைகள், வேளான் கழிவு மேலாண்மை ஆலைகள், அமைத்திடவும் விரிவாக்கம் செய்யவும் வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் முறையான திட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் https://ahidf.udyamimitra.in என்ற வலைத்தளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் இத்திட்டத்தில் தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பீட்டில் 90% வரை வங்கிக் கடன் பெறும் வசதி உள்ளது.இத்திட்டத்தில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு குறு நடுத்தர நிறுவனங்களாக இருப்பின் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலையும், இதர நிறுவனங்களுக்கு 25% வரையிலும், வங்கி கடன் கொடுக்கப்படும் என்றும் இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள நபர்கள் மேற்கூறிய வலைத்தளத்தில் விண்ணப்பித்து பயன் பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Bank Loan, Loan, Local News, Madurai, Money18