முகப்பு /மதுரை /

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் – மக்கள் வெள்ளத்தில் மாசி வீதிகளில் வலம் வந்த திருத்தேர்கள்!!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் – மக்கள் வெள்ளத்தில் மாசி வீதிகளில் வலம் வந்த திருத்தேர்கள்!!

X
மதுரை

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவையடுத்து அதிகாலையில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை திருத்தேர்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதி முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வோர் ஆண்டும் கோலாகலமாக நடைபெறக்கூடிய நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து  பட்டாபிஷேகம் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மீனாட்சி அம்மன்பூப்பல்லக்கில் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றன.

இந்த நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கக்கூடிய மாபெரும் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலையிலேயே மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலின் அம்மன் சன்னதியிலிருந்து பல்லாக்கில் புறப்பாடாகி, கீழமாசிவீதியில் உள்ள தேர்முட்டி சாலை பகுதியில் உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேர்களில் எழுந்தருளினர்.

தொடர்ந்து தேர்முட்டி சாலை பகுதியில் உள்ள தேர் மண்டபம்படி வழியாக பெரிய தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறிய தேரில் மீனாட்சி அம்மன் பூ மணிகள் என அலங்கரிக்கப்பட்டன. இந்த இரண்டு தேர்தலில் எழுந்தருளிய பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சுமதி யானை முன் செல்ல கீழமாசி வீதியில் இருந்து மேல் மாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி என 4 மாசி வீதிகள் முழுவதையும் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது பக்தி கோஷங்கள் எழுப்பி நூற்றுக்கணக்கானோர் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த திருத்தேரோட்டம் நிகழ்ச்சியைக் காண்பதற்கு என மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாசி வீதி முழுவதிலும் திரண்டனர். மேலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பக்தர்களின்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியிலிருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இததவிர பக்தர்கள் அனைவருக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் வெயிலின் தாக்கத்தை குறைக்கக்கூடிய வகையில் மோர்ரோஸ், மில்க், ரஸ்னா, பொங்கல் போன்ற குளிர்பானங்கள் அன்னதானம் போன்றவற்றை வழங்கினார்கள். இதனை பக்தர்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டனர்.

top videos

    இறுதியாக வடக்கு மாசி வீதியிலிருந்து மீண்டும் கீழ மாசு வீதியில் உள்ள தேர்முட்டி சாலை பகுதியில் இரண்டு திருத்தேர்கள்  பக்தர்களின் காட்சிக்காக திருத்தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Madurai