முகப்பு /மதுரை /

மதுரை சித்திரை திருவிழா... உணவு பாதுகாப்பு துறை விதித்த கட்டுப்பாடுகள் - முழு விபரம்!

மதுரை சித்திரை திருவிழா... உணவு பாதுகாப்பு துறை விதித்த கட்டுப்பாடுகள் - முழு விபரம்!

மதுரை சித்திரை திருவிழா - அன்னதானம்

மதுரை சித்திரை திருவிழா - அன்னதானம்

Madurai | தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலத்தின் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதினால் அன்னதானம் ஆங்காங்கே நடத்தப்படுகின்றது. அதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“ மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளுதல் தொடர்பான மண்டகபடிகளில் அன்னதானம் வழங்குதல் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், சர்பத், குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்து, மேற்படி இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக சேகரித்து மாநகராட்சி தெரிவித்துள்ள இடங்களில் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதேபோல கோடை காலத்தை முன்னிட்டு, அமைக்கப்படும் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவையும் தரமான குடிநீர் செயற்கை சாயங்கள் அற்ற உணவுகளை விற்பனை செய்ய வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருவிழாவை முன்னிட்டு, மண்டகபடிகள் மற்றும் அன்னதானம், பிரசாதம் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இணைய வழியின் (Online) மூலம் விண்ணப்பம் செய்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்று மட்டுமே வழங்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

top videos

    மேலும் உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ் ஆப் (Whatsapp No.) எண்.9444042322-ல் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Madurai