முகப்பு /செய்தி /மதுரை / மதுரை சித்திரைத் திருவிழா... பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்... நெகிழ்ச்சி சம்பவம்...!

மதுரை சித்திரைத் திருவிழா... பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்... நெகிழ்ச்சி சம்பவம்...!

மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா

madurai chithirai thiruvizha 2023 | திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி அம்மன் வீதி உலாவின் போது, இஸ்லாமியர்கள் குளிர்பானம் வழங்கிய நிகழ்வு மத நல்லிணக்கத்தைப் போற்றுவதாக அமைந்தது.

சித்திரைத் திருவிழாவையொட்டி நாள்தோறும் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது, உடன் வரும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஏராளமானோர் குடிநீர் பந்தல்கள் அமைத்தும், அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.

இந்நிலையில், தெற்குவாசல் பகுதியில் உள்ள முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கப்பட்டது. பள்ளிவாசல் அருகே அம்மனின் பல்லக்கு வந்த போது, தயாராக வைத்திருந்த ரோக் மில்க்கை இஸ்லாமியர்கள் வழங்கினர்.

Also Read : மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பாண்டிய கால ஓவியங்கள் வைப்பு!

திருவிழாவைக் காண வந்த பக்தர்கள் இன்முகத்துடன் குளிர்பானத்தை வாங்கிப் பருகினர். சாதி, மதங்களைக் கடந்த நல்லிணக்கத்தைப் பேணுவதாக சித்திரைத் திருவிழா இருப்பதை இந்த நிகழ்வு எடுத்துரைத்துள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Madurai, Madurai Chithirai Festival