உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும். அந்த கோவிலில் நடைபெறும் விழாக்களுக்கு மக்கள் திரளாக பங்கேற்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரபலம்.
இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
இதையும் படிங்க: கோடைக்காலத்தில் முலாம் பழம் அவசியம் சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா..?
வருகிற 30ஆம் தேதி பட்டாபிஷேகமும், மே 1ஆம் தேதி திக் விஜயமும் நடக்க உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2 ஆம்தேதியும் மே 3ஆம் தேதி தேரோட்டமும் நடக்க உள்ளது.
மே 4ஆம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரைத் திருவிழா நிறைவுபெறுகிறது. இந்த சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வில் தமிழ்நாடு நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்னர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai