மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சி விபரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது.
01.05.2023 மற்றும் 02.05.2023 ஆகிய நாட்கள் அன்று மாலை 6.00 மணிக்கு மேலிருந்து 7.00 மணிக்குள் தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம் மற்றும் கோஷ்டி முடித்து சன்னதிக்கு திரும்புதல் வைபவம் நடைபெறும்
03.05.2022 அன்று காலை 11.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம் மற்றும் கோஷ்டி முடித்து சன்னதிக்கு திரும்புதல் , மாலை 5.00 மணிக்கு உட்பிரகாரம் அலங்கார மண்டபத்தில் அலங்காரமாகி . மரியாதை முதலியவை செய்வித்து கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திற்கு எழுந்தருளல் . பின்னர் மாலை 7.00 மணிக்கு மேல் 07:10 மணிக்குள் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து மதுரைக்கு புறப்படுதல் வைபவம் நடைபறும்.
04.05.2022 அன்று மதுரை மூன்றுவாடியில் எதிர் சேவை நிகழ்ச்சி நடைபெறும்.
05.05.2023. அன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
06.05.2023. அன்று வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் அருள்மிகு கள்ளழகர் புறப்படுதல் பின்னர் கெருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் வைபவமும் இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும்
07.05.2023. அன்று அதிகாலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சியளித்தலும், பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதலும் நடைபெறும்,
08.05.2023. அன்று அழகர் மலைக்கு திரும்புதல் வைபவம் நடைபெறும்.
09.05.2023 அன்று காலை 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அழகர் மலை சேருவார்.
10.05.2023. அன்று உற்சவ சாற்று முறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.