முகப்பு /மதுரை /

கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்கள் உருமா கட்டுவது ஏன் தெரியுமா?

கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்கள் உருமா கட்டுவது ஏன் தெரியுமா?

X
அழகர்

அழகர் வேடமணியும் பக்தர்கள்

Madurai chithirai festival | மதுரை தேர்முட்டி சாலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்கள் தலையில் உருவாக்கட்டுவது வழக்கம்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வருகின்ற மே ஐந்தாம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்வைகாண்பதற்கு என மதுரை முத்து மதுரை சுற்றியுள்ள மக்கள் என்ன பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.இதுபோகஇந்த நிகழ்வை முன்னிட்டு மதுரை தேர்முட்டி சாலை பகுதியில் கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் கள்ளழகர் வேடத்தில் ஒருபகுதியாகதலையில் உருமா கட்டுவது என்பது விளக்கம்.

இது குறித்து கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்கள் கூறுவது,

அழகுமலையானுக்குபணிவிடை செய்வதற்காக நாங்களும்அழகு மலையான்கோலம் போலவேஜோடித்துஅழகு மலையான்போலவே உருமா கட்டிக் கொள்வோம். இதனை ஒரு நேர்த்திக்கடனாக நாங்கள் வாழையடி வாழையாக விரதம் இருந்து மாலை அணிந்து செய்து வருகின்றோம். அந்தகாலத்தில் இருந்துசெய்து வந்ததால் இதனை நாங்கள் தற்பொழுது வரை செய்து வருகின்றோம் எங்களுக்கு அடுத்து எங்கள் பிள்ளைகளும்இதனைசெய்வார்கள்.

அழகர்கோவிலில் இருந்துபுறப்பாடு ஆகிய கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி மீண்டும் அழகர் கோவில் மலைக்குபோய் சேர்வது வரைக்கும் நாங்கள் இந்த மாலையையும் உருமாவையும் கழட்ட மாட்டோம். கள்ளழகர் மீண்டும் அழகர் கோவிலுக்கு சென்ற பிறகு விரதத்தை கலைத்து விடுவோம்.

இந்த உருமா கட்டுவதற்காகவே நாங்கள் வருஷம் வருஷம் பயன்படுத்தி வந்த புடவையைதான் பயன்படுத்துவோம். ஆனால் அது கிழிந்து போனால் மட்டுமே அதனை ஆற்றில் தூக்கிபோட்டு புதிய புடவை ஒன்று வாங்கி உருமா கட்டுவோம். இந்த உருமா புடவையை இந்த நாள் மட்டும் தான் பயன்படுத்திக் கொள்வோம் மற்ற நாட்களில் ஒரு பெட்டியில் போட்டு தனியாக வைத்து விடுவோம்அதைபெண்கள் யாரும் பயன்படுத்தாத வகையில் பத்திரமாக வைத்துக் கொள்வோம்.

ALSO READ | மணக்கோலத்தில் ஜொலித்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர்.. மகிழ்ச்சியில் மதுரை மக்கள்!

அழகு மலையனுக்காக ஜோடித்து நாங்களும் கள்ளழகர் வேடம் அணிந்து உருமாவை கட்டிக்கொண்டு அழகுமலையானுக்குத் தொண்டு செய்யும் வகையில் தண்ணீர் பீச்சி அடிப்போம்.

இதுகுறித்து பேசிய உருமா கட்டும் வியாபாரி, இத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருகிறேன் இந்த மாதத்தில் மட்டும் இங்கு வந்து கள்ளழகர் வேடமணியும் பக்தர்களுக்கு உருமாவை கட்டி விடுவோம். பக்தர்களும் பாரம்பரியமான புடவைகள் அல்லது அழகு மலையனுக்காகவே ஜோடிக்கக்கூடிய புடவைகளை கொண்டு வருவார்கள் அதனை உருமா கூடை வைத்து கட்டி விடுவோம் அல்லது கூடை இல்லாமல் துணியை வைத்து கட்ட வேண்டும் என்றாலும் உருமாவாக கட்டி கொடுப்போம். இது போக உருமாவில் மயில் போன்ற அலங்காரப் பொருட்களை வைத்து கட்டுவோம் ஏனென்றால் அழகுமலையானை போல் ஜோடிக்க வேண்டும் என்பதால் இதனை வைத்து அழகு படுத்துவோம்.

மேலும் தூரத்தில் இருந்து பார்த்தாலும் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தான் என்று தெரியக்கூடிய வகையிலும் இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றார்கள். இந்த உருமாவை கட்டுவதற்கு 150 ரூபாய் வசூல் செய்கின்றேன். மயில் போன்ற அலங்காரப் பொருட்களும் தனியாக இங்கு விற்பனை செய்து வருகின்றோம் என்றார்.

இத்தொழிலைப்பாரம்பரியமாகச்செய்து வருகிறேன் இந்த மாதத்தில் மட்டும் இங்கு வந்து கள்ளழகர் வேடமணியும் பக்தர்களுக்குஉருமாவைகட்டி விடுவோம். பக்தர்களும் பாரம்பரியமான புடவைகள் அல்லது அழகு மலையனுக்காகவே ஜோடிக்கக்கூடிய புடவைகளை கொண்டு வருவார்கள் அதனை உருமா கூடை வைத்து கட்டி விடுவோம் அல்லது கூடை இல்லாமல் துணியை வைத்து கட்ட வேண்டும் என்றாலும் உருமாவாக கட்டி கொடுப்போம் என தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai, Madurai Chithirai Festival