முகப்பு /செய்தி /மதுரை / பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்! - மக்கள் வெள்ளத்தில் மதுரை

பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்! - மக்கள் வெள்ளத்தில் மதுரை

கள்ளழகர்

கள்ளழகர்

கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய கண்கொள்ளா காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

  • Last Updated :
  • Madurai, India

பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 22 நாட்கள் நடைபெறும் 'திருவிழாக்களின் திருவிழா' - சித்திரைப் பெருவிழாவில் ஏப்ரல் 23 முதல் மே 4 வரை மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களும், மே 1 முதல் 10 வரை கள்ளழகர் கோவில் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இதில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார். ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவனி வந்தார். கோவிந்தா...கோவிந்தா... கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கினர்.

கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கும் அந்த நிகழ்வை காண இரவு முழுவதும் பக்தர்கள் காத்து கிடந்தனர். மதுரையில் பெய்த தொடர் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகர் வரும் வழி நெடுகிலும் அழகர், கருப்பசாமி வேடம் அணிந்த மேள தாளத்துடன் ஆடி பாடி கள்ளழகரை வரவேற்றனர். இந்நிகழ்வானது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

' isDesktop="true" id="965282" youtubeid="mhm_gv0CIR4" category="madurai">

கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கியதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ஆற்று தண்ணீரை ஒருவருக்கு ஓருவர் அடித்து மகிழ்ந்தனர் .அழகர் வரும் போது, வராறு.. வராறு.. அழகர் வராறு என்ற பாட்டிசைக்க இளைஞர்கள் உற்சாகத்தில் அழகரை நோக்கி தண்ணீரை அடித்தனர்.

ஒவ்வொருவரும் ஒரு வித ஓசை எழுப்பும் பீ பீ யை ஊதிய படி அழகரை வரவேற்றனர்.

top videos

    கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய கண்கொள்ளா காட்சியை கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம், பாட்டம் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival, Tamil News