மதுரையில் கடந்த சில நாட்களாகவே வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. அதாவது 36 டிகிரி செல்சியஸிலிருந்து 41 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம்அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மலை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் மதுரையில் சமீப காலமாக வெயில் சுட்டரிப்பதினால் வேலைக்கு செல்வோர் மற்றும் வெளியே செல்லும் நபர்கள் மிகுந்த சிரமம் அடைந்தார்கள். இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம் நிகழ்ந்தது. பின்னர், மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளான அண்ணா நகர், கே.கே நகர், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், முனிச்சாலை, ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம், சர்வேயர் காலனி, ஆழ்வார்புரம், எஸ் எஸ் காலனி, வண்டியூர், மேலமடை போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழையானது கொட்டி தீர்த்தது.
ALSO READ | மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு ஏசி பேருந்துகள் - போக்குவரத்து துறை அறிவிப்பு!
பங்குனி மாதத்தில் இருந்து தற்போது சித்திரை மாதம் வரை வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வந்தமதுரை மக்களிடையே கடந்த இரண்டு நாட்களாக, சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருவது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து கன மழை பெய்தது சித்திரைத் திருவிழாவை வரவேற்கும் விதமாக இருக்கின்றது என்றும், திருவிழா தொடங்கியதால், கனமழை பெய்வதாகவும்மதுரை மக்கள் கூறுகின்றார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, Local News, Madurai, Madurai Chithirai Festival