முகப்பு /மதுரை /

அள்ளிக் கொடுக்கும் நாயகன், ஆணவம் கெடுக்கும் நாயகி... முதல்நாள் திருஉலா! - #மதுர_சீரிஸ்

அள்ளிக் கொடுக்கும் நாயகன், ஆணவம் கெடுக்கும் நாயகி... முதல்நாள் திருஉலா! - #மதுர_சீரிஸ்

மீனாட்சியம்மன் கோவில் - முதல் நாள் வீதி உலா சிறப்புகள்

மீனாட்சியம்மன் கோவில் - முதல் நாள் வீதி உலா சிறப்புகள்

Madurai Chithirai Thiruvizha Series | தீமை அழித்து நன்மை காக்கும் சிம்ம வாகன தரிசனம் பகை, தடை, எதிர்ப்பு ஆகியவற்றை விலக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

  • Last Updated :

'புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப் பல்விருகமாய்ப் பறவையாய்ப் பாம்பாகி' என மணிவாசகப் பெருமான் பாடுவதுண்டு. உயிர்களின் பரிணாம வளர்ச்சியை வாசகர் சொல்லாக்கினால் ஈசன் தன் வாகனமாக்கினார். தொடக்கம் முதல் இறுதிவரை அத்தனை வாகனங்களும் உலகுயிர்களின் பரிணாமம்.

திருவிழா வாகனங்களை கவனித்தால் சிறிய வாகனங்கள் தொடங்கி பெரிய வாகனமாய் முடியும். அதை அத்தியாயங்கள் வாசிக்க வாசிக்க அறியலாம். முதலாம் நாள் கற்பக விருட்சம் வாகனம் ஈசனுக்கும், அன்ன வாகனம் அம்பிகைக்கும்.

பரிணாமத்தின் தொடக்கம் புல்லும் புள்ளும் தானே. எல்லாம் தருகிற கற்பக விருட்சமும், ஆணவம் அடக்கும் சிம்மமும் வாகனங்கள் எல்லாமும் கிடைத்துவிட்டால் ஆணவம் மேலோங்குமே. அதனை அடக்க வேண்டும் என்பதன் குறியீடு.

முதல்நாள் வீதி உலா எழுந்தருளள்

பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்தவற்றில் கற்பக விருட்சமும் ஒன்று என்கிறது புராணம். பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகியவற்றோடு கற்பக விருட்ச மரமும் தேவலோக மரங்கள் எனப்படுகின்றன. அத்தகைய சிறப்பு வாகனத்தில் சொக்கர் வலம்.

ஆமை உருவ கூர்மாசனம், எட்டு அரவ நாகாசனம், சிம்மாசனம், யுகங்களும் மறைகளும் அடங்கிய பூதாசனம், கமல விமல இதழ்கள் கொண்ட பத்மாசனம் ஆகியவை இறை ஆசனங்கள். இதில் மூன்றாவதான சிம்மாசனத்தில் முதல்நாள் அம்பிகை பவனி.

முதல்நாள் வீதி உலா எழுந்தருளள்

தீமை அழித்து நன்மை காக்கும் சிம்ம வாகன தரிசனம் பகை, தடை, எதிர்ப்பு ஆகியவற்றை விலக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். திருவிழா தொடங்கிய களை, நகரம் முழுவதும் மிளிர்கிறது. தினமும் வாகனங்கள் வளர்ச்சி ஒருபுறமும், தேர்களின் கட்டுமான வளர்ச்சி மறுபுறமும் தெரியும்.

தேரின் குடைப் பகுதியை கட்டத் தொடங்கியிருப்பார்கள் இப்போது. அம்மன் சன்னதி வீதியில் உலா தொடங்கும் போது ஒரு மண்டபத்தைக் காணலாம். வீதிமுழுக்க அகலமாய், அந்த மண்டபம் மட்டும் குறுகலாய் இருக்கும். இப்போது எதற்கு இது என தோன்றுகிறதா? விஷயம் இருக்கிறதே...

பூதவாகனத்தில் ஈசனும் அன்ன வாகனத்தில் அன்னையும் அருளும் இரண்டாம்நாள் உற்சவம் குறித்து அடுத்த பதிவில் காணலாம்..

top videos

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை

    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival