முகப்பு /மதுரை /

மதுரை சித்திரைத் திருவிழா : தேர்களுக்கான மராமத்தை முன்னதாகவே தொடங்க கோரிக்கை!

மதுரை சித்திரைத் திருவிழா : தேர்களுக்கான மராமத்தை முன்னதாகவே தொடங்க கோரிக்கை!

X
மதுரை

மதுரை சித்திரைத் திருவிழா : தேர்களுக்கான மராமத்தை முன்னதாகவே தொடங்க கோரிக்கை!

Madurai Chithirai festival : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இந்தாண்டு ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது. திருக்கல்யாணம் முடிந்து ஏப்ரல் 15-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

துரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இந்தாண்டு ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது. திருக்கல்யாணம் முடிந்து ஏப்ரல் 15-ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்திற்கு முன்பாகவே தேர் ஷெட்களை கழற்றி மராமத்து பார்க்கும் பணி தொடங்கி விடும். அதற்கு நாட்கள் இன்னும் நிறையவே உள்ளன. எனினும் மூன்றாண்டுகள் தொடர்ந்து தேர்கள் மூடப்பட்டே கிடந்ததால் தூசு படிந்து அழுக்கு மண்டி காட்சியளிக்கின்றன.

எனவே வழக்கத்தைவிடக் கூடுதல் நாட்களுக்கு முன்பாகவே தேர் ஷெட்களை கழற்றி, நல்ல முறையில் தேர்களை நிதானமாக மராமத்துப் பணிகள் பார்த்து தயார் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அதுமட்டுமன்றி மாசிவீதி பல ஆண்டுகளாகவே தார்ச்சாலையாக இருந்த நிலையில், தூசு பிரச்சனைகள் அவ்வளவாக இருந்தது இல்லை. ஆனால் இந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி பணியின் ஒரு பகுதியாக மாசிவீதிகள் அனைத்துமே சிமெண்ட் ரோடாக போடப்பட்டு விட்டதால், சாலைகள் முழுவதும் தூசு படிந்து கிடக்கின்றன.

இதனால் தேர்களிலும் தூசு தொடர்ந்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஷெட்களை கழற்றி தூசு உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தாலும்கூட தொடர்ந்து வாகனங்களின் புகை மற்றும் புழுதி படிகிற வாய்ப்பு அதிகம் என்பதால் அதற்கான மாற்று வழிகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டியது அவசியம்.

தேர் நின்றிருக்கும் பகுதியில் இருந்து சில மீட்டர் தூரத்திற்கு வாகன நிறுத்தம் மற்றும் வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக அந்த தேர் பகுதி முழுக்கவே துப்புரவு பணியாளர்களால் தூசி, புழுதியை சுத்தம் செய்து அந்த சாலைப் பகுதியை ஈரமாக்கி வைத்திருப்பதன் மூலம், தேரில் தூசி படியாமல் பாதுகாக்க முடியும்.

அதுமட்டுமன்றி சாதாரண சக்கரங்களும் இந்த சிமெண்ட் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்கிற சூழலில் தேர் சக்கரங்கள் தார்ச் சாலைக்கு பதிலாக சிமெண்ட் சாலையில் வழுக்கும் தன்மையை, எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும் கோயில் நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் வழக்கமான மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு முதல், தேரோட்டத்தில் கூடுதல் கவனமும் முன்னேற்பாடுகளும் செய்து, திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டியது கோயில் நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சியின் கைகளில்தான் உள்ளது என்பது மக்களின் கருத்து.

செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை

First published:

Tags: Car Festival, Madurai