உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மே 2 தேதி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணமும், மே 5ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கள்ளழகர் வேடமடைந்து தண்ணீர் பீச்சுவது வழக்கமாக உள்ளது. அப்படி விரதம் இருந்து கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்கள் தனது வேடத்தின் ஒரு பகுதியாக தலையில் உருமா கட்டுவதும் வழக்கம். இந்து உருமாவை கட்டுவதற்காகவே வாழையடி வாழையாக உருமாக் கூடை செய்யும் தொழிலை மதுரை தேர்முட்டி அருகில் விற்பனை செய்து வருகின்றார்கள்.
இதுகுறித்து உருமாக்கூடையை விற்பனை செய்யும் குருசாமி இடம் கேட்ட பொழுது, நாங்கள் இத்தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றோம். சித்திரைத் திருவிழா அம்மாவாசை அன்று கொடியேற்றிய உடனே எங்கள் சொந்த ஊரான பெருங்குடியில் இருந்து மதுரைக்கு வந்து விற்பனை செய்ய தொடங்குவோம்.
முதலில் எங்கள் தாத்தா காலத்தில் உருமாவை சேலையை வைத்து தான் தலைப்பாகை போல் கட்டுவார்கள் ஆனால் தற்பொழுது தாத்தா காலத்திற்குப் பிறகு இந்த உருமாவிற்காகவே கூடைஒன்று செய்து உருமா கட்டுகின்றோம். ஆனால் இந்த உருமா கட்டும் முறை என்பது பாரம்பரியமான ஒன்று.
இதையும் படிங்க | மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பாண்டிய கால ஓவியங்கள் வைப்பு!
இந்தக் கூடைசெய்வதற்காக கேரளாவிலிருந்து மூங்கில்களை வாங்கி வந்து உருமா கட்டுவதற்கு ஏற்ற மாதிரியாக கூடைசெய்து வருகின்றோம். இந்த உருமாவை ஏன் கட்டுகிறார்கள் என்று கேட்டீர்கள் என்றால் அந்த காலத்தில் இருந்து இந்த உருமா கட்டி சாமி வேடம் அணிந்து தண்ணீர் பீச்சி ஆடுவது என்பது ஐதீகமாகவும் வழக்கமாகவும் இருந்து வந்துள்ளது. இதனால் தான் தற்பொழுது வரை நாங்கள் இத்தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றோம்.
மூங்கில்களை வாங்கி மதுரைக்கு வந்து, சித்திரை திருவிழா நடக்கும் பத்து நாள் வரைக்கும் இந்த கூடைகளைநாங்களே செய்து எங்களிடம் உருமா கட்ட வரும் பக்தர்களுக்கு இந்த கூடையை வைத்து, அதன் மேல் அவர்கள் விரதம் இருந்து பூஜை செய்து நேர்த்திக்கடனாக கொண்டு வரும் சேலை, மயிலிறகு போன்றவற்றை வைத்து உருமா கட்டி விடுவோம். இவைதான் பரம்பரை பரம்பரையாக நாங்கள் செய்துவரும் பாரம்பரியமான தொழில்.
அந்த காலத்தில் அதாவது எங்க தாத்தா காலத்தில் உருமா கட்டுவதற்காக 25பைசா (நாலனா) விலை இருந்தது ஆனால் தற்பொழுது கூடை வைத்து உருமா கட்டுவதற்கு 200 ரூபாய். ஏனென்றால் கேரளாவில் இருந்து மூங்கில் வாங்கி அதனை கூடையாய் பின்னி ஊருமா கட்டுவதற்கு எங்களுக்கு லாபம் என்பதோ நூறு ரூபாயாக தான் இருக்கும். ஆனால் இது எங்கள் பரம்பரையான தொழில் என்பதால் இதனை ஒவ்வொரு வருடமும் அழகுமலையனுக்காக செய்து வருகின்றோம் என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.