முகப்பு /மதுரை /

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.. மதுரையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.. மதுரையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..

X
பச்சை

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

Madurai Kallazhagar Festival 2023 : மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

  • Last Updated :
  • Madurai, India

சித்திரை மாதம் வந்தாலே மதுரையே களைக்கட்டும். ஏனென்றால் மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் முதலில் மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பாடாகி வரும் வழியில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து மூன்று மாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெற்ற நிலையில், தல்லாகுளம் பிரசன்னா வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தடைந்தார்.

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

பின்பு அங்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்ற பிறகு சுமார் மூன்று மணி அளவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பாடாகி மதுரையில் உள்ள பல மண்டகப் பணிகளுக்கு சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்து பின்பு நாடு செழிப்பாக இருக்கும் என்பதை குறிக்கக்கூடிய வகையில் பச்சை பட்டுஉடுத்தி ஆண்டாள் சூடிய மாலை அணிவித்து ஐந்து 50 மணியளவில் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமும் இசையுடனும் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

முன்னதாக கள்ளழகரை வரவேற்கும் விதமாக 5.15 மணியளவில் வீரராகவப் பெருமாள் வைகை மண்டகப்படிக்கு வந்தடைந்தார். இந்த நிகழ்வை காண்பதற்கு என விடிய விடிய சாரல் மழை யையும் பொருள்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆறு மற்றும் ஆற்றின் இருபுறங்களிலும் திரண்டனர். மேலும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு லட்சக்கணக்கான மக்கள் அழகர் மீது தண்ணீர் பீச்சியடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், கூட்ட நெரிசலையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் வரவழைக்கப்பட்டு, வைகை ஆறு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Madurai