தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி இரண்டு வாரம் நடைபெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வில் மொத்தம் 9,38,291 மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், மதுரை மாவட்டத்தில் 38,063 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதில் மதுரை மத்திய சிறையில் 4 ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு நிகராக சிறைவாசிகளுக்கு கல்வி வழங்கப்பட்டது. குறிப்பாக, காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தினமும் பொதுத் தேர்வு எழுதும் சிறைவாசிகளுக்கு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வாரந்தோறும் தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இதையும் வாசிக்க: சிவகங்கையில் 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம்பிடித்து சாதித்த ஆட்டோ ஓட்டுநர் மகள்...
இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 23 ஆண்கள், ஒரு பெண் உள்பட 24 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதன்மூலம் மதுரை மத்திய சிறையில் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் சிறைவாசி அறிவழகன் என்பவர் 363 மதிப்பெண்களும், மற்றும் சிறைவாசி உதயகுமார் என்பவர் 360 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், மதுரை மத்திய சிறையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 15 பேரில் 14 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 10th Exam Result