Home /madurai /

மதுரைல இந்த பன் பரோட்டா கடை ஏன் இத்தனை பிரபலம் தெரியுமா? ரகசியம் இதுதான்..

மதுரைல இந்த பன் பரோட்டா கடை ஏன் இத்தனை பிரபலம் தெரியுமா? ரகசியம் இதுதான்..

மதுரை

மதுரை பன் பரோட்டா கடை

Madurai Bun Parotta Shop | மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள மதுரை பன் புரோட்டா கடையில் தான் முதன் முதலாக பன் புரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
நம் தமிழகத்தில் பல வகையான உணவுகளுக்கு பெயர் போன ஊர், உணவை கொண்டாடும் ஊர் என்றால் அது நிச்சயமாக மதுரை என்று கூறுவது மிகையாகாது..

மதுரையில் அனைவரும் பெரிதும் விரும்பும் உணவுகளில் பரோட்டா முக்கியமானது. அந்த வகையில் பரோட்டாவில் இருந்து சற்று வித்தியாசமாக தயாரிக்கப்பட்ட ஒரு வகை தான் இந்த பன் புரோட்டா.. இன்று பெரும்பாலானோர் விரும்ப கூடிய உணவாக பன் பரோட்டா மாறிவிட்டது.

இன்று பன் புரோட்டா என்ற பெயரில் பல கடைகள் வந்தாலும் இதற்கு மூலகாரணமாக இருந்தது மதுரை அண்ணா நகரில் ஆவிண் அருகே சாலையோர பிளாட்பாரத்தில் தொடங்கப்பட்ட மதுரை பன் பரோட்டா கடை தான்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இன்று மதுரையின் முக்கியமான உணவகங்களில் ஒன்றாக உள்ள மதுரை பன் பரோட்டா கடையைன் உரிமையாளர் கருப்பணன் அவர்கள் பேசுகையில் இந்த கடையை முதலில் பிளாட்பாரத்தில் ஆரம்பிக்கும்பொழுது சாதாரண கடையாக தான் ஆரம்பித்ததாகவும் பின் நாளில் இங்கு வேலை புரிந்த புரோட்டா மாஸ்டர் இன் உதவியுடன் தான் பால், முட்டை போன்றவைகளை கலந்து பன் புரோட்டா தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மதுரையில் பல உணவகங்கள் இருந்தாலும் அண்ணா நகர் பன் புரோட்டா கடை நிச்சயமாக அனைவரும் சென்று ருசித்து பார்க்க வேண்டிய உணவகம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை...
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai, Parotta

அடுத்த செய்தி