Home /madurai /

டீ சாப்பிட்ட பின் இந்த கப்பையே கடித்து சாப்பிடலாம்.. மதுரையில் பிரபலமடையும் பிஸ்கட் கப் டீ கடை..

டீ சாப்பிட்ட பின் இந்த கப்பையே கடித்து சாப்பிடலாம்.. மதுரையில் பிரபலமடையும் பிஸ்கட் கப் டீ கடை..

மதுரையில்

மதுரையில் பிரபலமடையும் பிஸ்கட் கப் டீ கடை

Madurai Biscuit Cup Tea Shop | மதுரை மேல மாசி வீதியில் இயங்கி வரும்  ஆர்.எஸ்.பதி டீ கடையில் பிஸ்கட் மாவில் செய்யப்பட்ட கப்பில் தேநீர் விற்பனை செய்யபடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    நம்மில் பலருக்கும் வெளியே செல்லும்போது தேநீர் கடைகளில் தேநீர் அருந்துவது வழக்கம், சிலர் தேநீர் குடிப்பதற்காகவே வெளியே செல்வார்கள்..

    இப்படியான தேநீர் கடைகளில்,  கண்ணாடி குவளைகள், பிளாஸ்டிக் கப்புகள் அல்லது பேப்பர் கப்புகளில் தான் தேநீர் அருந்தி இருப்போம் ஆனால் தேநீர் உடன் நாம் தொட்டு சாப்பிடும் பிஸ்கட் ஐயே கப்பாக வைத்து தேநீர் அருந்தியது உண்டா??

    ஆம்.. மதுரை மேல மாசி வீதியில் அமைந்துள்ள கடை தான் ஆர்.எஸ்.பதி பிஸ்கட் கப் டீ கடை. இங்கு பிஸ்கட் மாவு கொண்டு செய்யப்பட்ட கனமான கப்களில் தேநீர் பரிமாறப்படுகிறது. இந்த கப்களில் தரும் தேநீரை  அருந்தி விட்டு அந்த பிஸ்கட் கப்பை அப்படியே சாப்பிடலாம்.


    மதுரையில் பிரபலமடையும் பிஸ்கட் கப் டீ கடை


    ஒருவர் குடித்த கப்பில் சிலருக்கு தேநீர் குடிப்பது பிடிக்காது. இதற்காகவே பிளாஸ்டிக் கப்களை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இந்த பிஸ்கட் கப்பில் தேனீர் பருகுவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல அமைகிறது. இதன் மூலம் மற்றவர் பருகிய கப்பில் தேநீர் அருந்துவது தவிர்க்கப்படுவதுடன், வீணாக கீழே எரிந்து சுற்றுப்புறத்திற்கு தீங்கு ஏற்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

    மதுரையில் தற்போது இந்த பிஸ்கட் கப் டீக்கடைக்கு என பிரத்யேக ரசிகர் வட்டம் உருவாகியிருப்பதுடன், ட்ரெண்டாகவும் மாறியிருக்கிறது.


    மதுரையில் பிரபலமடையும் பிஸ்கட் கப் டீ கடை


    இந்த விநோதமான ஐடியா குறித்து இக்கடையின் உரிமையாளர்  விவேக் சபாபதியிடம் பேசினோம்..  “இந்த டீ கடை ஆர்.எஸ்.பதி மருந்துகள் விற்பனைக்கு பின்னர் தொடங்கப்பட்டதாகவும், 2019 வரை சாதாரண டீ கடையாகவே செயல்பட்டு பின்பு கொரோனா காலகட்டத்தில் தான் மக்கள் பார்வையை ஈர்க்க பிஸ்கட் கப்பை வேறு ஒரு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து அதில் டீ விற்பனை செய்ததாகவும் கூறினார்.

    இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இந்த டீ கடைக்கு பிஸ்கட் கப்பில் டீ குடிப்பதற்காகவே பலரும் வந்து செல்வதாகவும் கூறினார். இந்த கடையில் பிஸ்கட் கப்புகள் மட்டுமல்லாது மண்பானை கப்பிலும் தேநீர் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    இந்த பிஸ்கட் கப் டீ கடைக்கு சென்று ஒரு கப் தேநீர் சுவைக்க விரும்பினால் கீழ்கண்ட மேப்-ஐ க்ளிக் செய்து இருப்பிடத்தை அறிந்து கொள்ளுங்கள்..

    RS Pathy tea shop madurai
    மதுரை பிஸ்கட் கப் டீ கடை
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Madurai, Tea

    அடுத்த செய்தி