மதுரை ஆரப்பாளையம் வைகை கரை அருகில் நூற்றாண்டுகள் பழமையான ஜீவசமாதிரியான ட்ரெயின் தங்கவேல் சுவாமிகள் ஜீவசமாதி ஒன்று உள்ளது. யார் இந்த தங்கவேல் ஸ்வாமி, எப்படி இங்கு ஜீவசமாதி அடைந்தார் என்பது பற்றி தெரிந்து கொள்ள உள்ளே சென்றோம். உள்ளே, அமைதியான சூழ்நிலையில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் கொண்ட குட்டி தோட்டம் மாதிரி காட்சியளித்தது. அங்கு பெரிய அரசமரம் அடியில் விநாயகரும் நடுவில் ஜீவசமாதி அடைந்த தங்கவேல் சுவாமியும் மற்றும் இந்த இடத்தை பராமரித்து வந்த சுப்பையா சுவாமி மடமும் இதனைச் சுற்றி மரங்கள் நிறைந்த பகுதியில் முருகன், அம்மன் போன்ற தெய்வங்களின் சிலைகளும் காட்சியளித்தன.
ரொம்பவே அமைதியான சூழ்நிலையில் பறவையின் இசையுடன் அங்குள்ள சுவாமி ஒருவர் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார். சரி ஜீவசமாதி அடைந்த தங்கவேல் சுவாமியை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று அவரிடம் கேட்கத் தொடங்கினோம். ஆரப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய இந்த ஜீவசமாதி, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ தங்கவேல் சுவாமிகள் தங்கியிருந்த புட்டு தோப்பு மடத்திலிருந்து ஆரப்பாளையத்தில் அப்போது அமைந்திருந்த ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் மடத்திற்கு தினசரி வந்து சொல்வது வழக்கமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இப்பகுதியில் வெள்ளை கண்ணு பிள்ளை என்ற ஒருவர் இருந்தார். அவர் வைகை நதி கரையில் ஒரு சுண்ணாம்பு காளவாசல் வைத்திருந்தார்.
அப்பொழுது சுவாமி புட்டு தோப்பு மடத்திலிருந்து வழக்கம் போல் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் மடத்திற்கு செல்வதற்காக ஆற்றங்கரை ஓரமாக ஒரு நாள் கடந்து வந்து கொண்டிருந்த பொழுது இவர் சுவாமியை பார்த்து எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சுவாமி ராமலிங்க சுவாமிகள் மடத்திற்கு சென்று கொண்டிருப்பதாக பதில் அளிக்க அங்க போய் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சுவாமி தன்னைப் போன்ற சன்னியாசிகளுடன் ராமாயணம் மகாபாரதம் சிவபுராணம் போன்ற ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசுவோம் என்றார்.
அதற்கு இவர் அத்தகைய விஷயங்களைப் பற்றி தெரியாத என்னிடம் அவற்றைப் பற்றி கூறினால் பலன் உண்டு எனக்கு அவற்றைப் பற்றி ஏதும் தெரியாது. ஆகையால் என் வீட்டில் தங்கி விடுங்கள மூன்று வேளை உணவும் படுக்கைகளையும் நான் ஏற்பாடு செய்கின்றேன். இரவில் மட்டும் எனக்கு கதை கூறுங்கள் என்று இவர் கேட்க சுவாமியும் இவருடன் இங்கேயே இருந்தார். பிள்ளையவன் மிகவும் வசதி படைத்தவன் என்பதால் தாழ்ந்த இனத்தவர்கள் இவரது இடத்தை தாண்டி செல்லும்போது தலைப்பாகை அணிந்திருந்தாலோ சுருட்டு பீடி புகைத்துக் கொண்டு சென்றாலோ காலநிலை அழிந்து கொண்ட சென்றாலோ கழுதையை மேய்த்துக் கொண்டே சென்றாலோ மாட்டு வண்டியில் அமர்ந்து ஓட்டிக்கொண்டு சென்றால் அவர்களை கடுமையாக தண்டிப்பது வழக்கமாக வைத்திருந்தார்.
அப்பொழுது சுவாமி இந்தத் தீய செயல்களை கண்டு வருந்தி தாங்கள் செய்து கொண்டிருப்பது இந்த பாவத்தில் எனக்கு பங்கு வந்துவிடும் நான் திரும்பவும் புட்டு தோப்பு மடத்திற்கே சென்று விட முடிவு செய்து விட்டேன் என்று சுவாமி கூற அதற்கு இவர் நான் செல்வம் செல்வாக்கு உடல் பலம் படைத்தவன் நான் எதை செய்தாலும் யாரும் என்னை கேட்க முடியாது, நீ என்னிடம் மூன்று வேலை உணவு சாப்பிடுகின்றாய் என்னை எதிர்த்து பேசுகிறாயா, உன்னால் ஏதோ செய்ய முடியும் என்று சொன்னியே அதை இப்போதே செய்துவிட்டு இவ்விடத்தை விட்டு போ என்று கோபத்துடன் இவர் சொல்ல ஸ்வாமையும் அமைதியுடன் அப்படியா இங்கேயே நில் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அப்பொழுது வழக்கம்போல் வீட்டு வேலைக்காரர்வீட்டில் இருந்து இவருக்கு காலை மற்றும் மாலை உணவையும் கொண்டு வர இவரால் சிறிதளவு கூட அசை முடியாது நிலையில் இருப்பதால் அதைப் பார்த்துவிட்டு வீட்டு வேலைக்காரர் திரும்பிசென்று விட்டான். பின்பு சுவாமி வர, நான் நில் என்று சொன்னதற்கே நீ இப்படி ஆகிவிட்டாய் நான் ஏதும் செய்தால் என்ன நேரிடும் என்றார்.
உடனே இவர் என் தவறை உணர்ந்து விட்டேன் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று கூற,அதற்கு சுவாமி உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை தானே?மூன்று பிறவியிலும் பாவத்தை தான் செய்திருக்கின்றீர்,இனிமேலாவது அனைவருக்கும் நல்லது செய் என்றார். பிறகுவெள்ளை கண்ணு பிள்ளை சிறிது காலத்திலேயே இவர் இறந்து விட்டார். அவர் இறக்கும் முன்னர்,இவர் தன் மனைவியிடம் சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் ஆகையால் இவரை நாம் இருக்கும் இந்த பகுதியிலேயே அடக்கம் செய்து விடு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது 89 ஆவது வயதில்தங்கவேல் சுவாமிகள் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார்.பின்புஇப்பகுதியை பராமரித்து வந்தவர் சுப்பையா சுவாமி இவர் இறந்த பிறகு இவருக்கு இப்பகுதியிலேயே மடம் என்ற ஒன்றை கட்டினார். இந்நிலையில், நோய் நொடி நீங்க திருமணம் நடைபெற வெளிநாடுகளுக்குச் செல்ல என அனைத்து விதமான நோய்களையும் பௌர்ணமி அமாவாசை போன்ற நாட்களிலும் தினமும் வந்து அபிஷேகத்தை பார்த்துவிட்டு 21 முறை இப்பகுதியை சுற்றி வந்தால் நாம் வேண்டிக் கொண்ட காரியங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்றும் கூறுகின்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai