முகப்பு /மதுரை /

தினம் தினம் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்.. மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை சாலை சீரமைக்கப்படுமா?

தினம் தினம் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்.. மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை சாலை சீரமைக்கப்படுமா?

X
மதுரை

மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை சாலை சீரமைக்கப்படுமா?

Madurai News | மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள உழவர் சந்தை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள உழவர் சந்தை சாலை கடந்த சில மாதங்களாகவே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதிக வாகனங்கள் செல்லக்கூடிய இப்பகுதியில் கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம் வழியாக வரும் வாகனங்கள் பாண்டி கோவில், கருப்பாயூரணி போன்ற பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக இருக்கும். முக்கிய சாலையான இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் முறையான தெரு விளக்குகள் ஏதும் இல்லாத காரணத்தினால் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வந்து செல்கிறது. இதனால் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் ஆம்புலன்ஸ் வருவதில் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். மேலும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் இப்பகுதியில் பள்ளி வாகனங்களும் வந்து செல்கிறது.

மழைக்காலத்தில் ஏற்பட்ட இப்பள்ளத்தை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள் முதல் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரை இந்த சாலையில் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Madurai