மதுரை என்றாலே அனைவருக்கும் அங்குள்ள கோயில்கள், வரலாற்று சின்னங்கள், மதுரை மல்லிகை பூ, மதுரை ஜிகர்தண்டா, மற்றும் அங்கு கிடைக்ககூடிய உணவுகள் என பல விஷயங்கள் தங்களது நினைவில் வந்து செல்லும். அதிலும் முக்கியமாக இன்றைய தலைமுறையினருக்கு மதுரை என்றாலே முதலில் தோன்றுவது மதுரை உணவுகளும் அதன் ருசியும் தான். அந்த வகையில் மதுரை மக்களை தனது பிரியாணி ருசியால் கட்டிபோட்ட உணவகம் தான் மதுரை நெல்பேட்டையில் அமைந்துள்ள அம்சவல்லி பவன் உணவகம்.
அம்சவல்லி கடையின் வரலாறு:
மதுரைவாசிகள் தங்களது வாழ்வில் ஒரு முறையாவது இந்த உணவகத்திற்கு வந்து பிரியாணியை சுவைத்திருப்பர்.
இந்த கடையை தற்போது நிர்வகித்து வரும் அருண் ராஜ்-ன் தாத்தா 1952ல் இந்த அம்சவல்லி கடையை தொடங்கியிருக்கிறார். அவருக்கு பின்பு இவரது தந்தை தற்போது இவர் என இந்த கடை 3வது தலைமுறையாக நடத்தி வரப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
1952ல் பிரியாணி கடையாக மட்டுமே தொடங்கப்பட்டு இன்று பரோட்டா, சிக்கன் என அனைத்து விதமான உணவுகளும் கிடைக்கும் உணவகமாக அம்சவல்லி பவன் மாறியுள்ளது, இன்றும் மதுரை வாசிகள் இவர்களது பிரியாணிக்கே அடிமை. ஹைதராபாதி போன்று ‘தம்’ ஸ்டைலில் அல்லாமல் சீரகசம்பா அரிசியில் பிரியாணி செய்யப்படுவதால் விரைவில் செரிமானம் ஆகிவிடுகிறது.
1952ல் இந்த உணவகம் எந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ அதே இடத்தில் தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறது எனினும் மக்கள் வரவேற்ப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் 70 ஆண்டுகளை கடந்து இன்றும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Briyani, Local News, Madurai