வருகிற பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியின் மாமன்ற பதவிக்காக 61வது வார்டின் வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளார் பெண் வேட்பாளர் பாத்திமா பீவி.
இவர் வாக்காளர்களை கவருவதற்காக வார்டு முழுவதும் சுவரெங்கும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளார். அதில், தான் நிற்கும் கட்சியின் சின்னமான குக்கருக்கு வித்தியாசமான முறையில் வாக்கு கேட்டு வசனம் வைத்துள்ளார்.
\"மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க.., அதனால குக்கருக்கு ஓட்டு போடுங்க\" என்ற வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை வார்டு முழுவதும் ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளார்.
மதுரை போஸ்டருக்கும் பேமஸ் என்பதை நிரூபித்து வருகின்றனர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பாளர்களும்!
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alliance, AMMK, Election, Madurai, Party, Political, Poster