ஹோம் /மதுரை /

காலையில் வெயில்... மாலையில் மழை.. - மழையால் மதுரை மக்கள் மகிழ்ச்சி

காலையில் வெயில்... மாலையில் மழை.. - மழையால் மதுரை மக்கள் மகிழ்ச்சி

மதுரை

மதுரை

மதுரையில் பல நாட்களுக்குப் பிறகு நேற்று பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலான மழை பெய்தது.

இடி, மின்னல் இன்றி மாலை 5 மணி அளவில் மழை கொட்ட தொடங்கியது. கடந்த சில நாட்களாக மதுரையில் காலையில் வெயிலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல கருமேகங்கள் சூழ்ந்து திடீரென லேசான மழையுடன் தொடங்கி பின்பு பலத்த மழையாக கொட்ட தொடங்கியது.

சாலையெங்கும் மழை நீர் தேங்கியபோதும் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் வாகன போக்குவரத்து கம்மியாகவே இருந்தது. அதனால் பெரியளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

எனினும் சாலையோர வியாபாரிகள் அவதிப்பட்டனர். சாலைகள் வெறிச்சோடின. பல இடங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது, மதுரையில் பல நாட்களாக இருந்த வெட்கை நேற்றைய மழையால் தணிந்தது.

மதுரை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளான மேலூர் மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களிலும் மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai