Home /madurai /

அண்ணா பிறந்தநாள்- மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாள்- மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரையில் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி செப்டம்பர் 14ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் . முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு மதுரை டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டிகள் செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ என்ற தூர அடிப்படையில் போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்போர் தங்களது சொந்த மிதிவண்டிகளை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடிகளைக்கொண்ட மிதிவண்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கியர் மிதிவண்டி மற்றும் பந்தய மிதிவண்டிகள் அனுமதிக்கப்படமாட்டாது.

போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து கண்டிப்பாக வயதுச் சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். ஆதார் அட்டை எமிஸ் எண்ணுடன் பள்ளி அடையாள அட்டையும் கொண்டு வரவேண்டும்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 வரை இடம் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் செப்டம்பர் 14 காலை 7 மணிக்கு எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் ஆஜராக வேண்டும்

இவ்வாறு மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி