மதுரையில் காவலரே கூலிப்படையை ஏவி நகைக்கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது கடையில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஊமச்சிகுளத்தை சேர்ந்த ஹரிஹரபாபு என்பவர், அவருடைய மனைவியுடன் சென்று நகை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் மணிகண்டனின் தொழில் தேவைக்காக, ஹரி 6 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதே நேரம் மணிகண்டனுக்கும், ஹரியின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்தவுடன் மனைவியை கண்டித்த ஹரி, கடனாக கொடுத்த 6 லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு மணிகண்டனிடம் கேட்டுள்ளார்.
இதனை பொருட்படுத்தாமல் இருந்ததால் கடந்த ஜனவரி 31ம் தேதி அன்று கூலிப்படையை வைத்து மணிகண்டனை கொலை செய்தார் ஹரி. இது தொடர்பான வழக்கில் காவலர் ஹரிஹரபாபு (38) மற்றும் கூலிப்படையினரான திருச்செந்தூரை சேர்ந்த தினேஷ் (27), ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த அஜித் (25), ஐயப்பன் (26), கார்த்திக் (26), பாண்டி (26), முத்துப்பாண்டி (25), மணி (26), ஹைதர் அலி (26) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
Also see... மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வேடமணியும் பக்தர்கள் உருமா கட்டும் கூடை எதற்காக தெரியுமா?
குற்றவாளிகளில் காவலர் ஹரிஹரபாபு தவிர மற்ற 8 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gundas Act, Madurai