முகப்பு /செய்தி /மதுரை / ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய சிறுவன் உயிரிழப்பு.. மதுரையில் சோகம்!

ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய சிறுவன் உயிரிழப்பு.. மதுரையில் சோகம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Madurai Accident | வீடு வந்துவிட்டது என ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற சிறுவன் பேருந்து சக்கரத்தில் சிக்கினார்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய பள்ளி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மணி நகரம் பகுதியை சேர்ந்த ரிஷி குமார் (13) என்ற சிறுவன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். மணிநகரம் அருகே பேருந்து வந்த போது ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்ததால் நிலை தடுமாறி பேருந்திற்கு அடியில் சிக்கினார்.

உடனடியாக சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Accident, Death, Madurai