ஹோம் /மதுரை /

அடிப்படை வசதிகள் இல்லாத மதுரை மைய நூலகம்.. கவனிக்குமா மாநகராட்சி நிர்வாகம்?

அடிப்படை வசதிகள் இல்லாத மதுரை மைய நூலகம்.. கவனிக்குமா மாநகராட்சி நிர்வாகம்?

மதுரை

மதுரை மைய நூலகம்

Madurai Central Library | மதுரையின் சிறப்பு பெற்ற சிம்மக்கல் மத்திய நூலகம் சுகாதார வசதிகள் எதும் செய்யப்படாமல் உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல அரசு நூலகங்கள் இயங்கி வருகின்றன. அந்த வரிசையில் மதுரையில் இயங்கி வரும் பிரதான நூலகம் தான் மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள  மத்திய நூலகம். போட்டித்தேர்வுக்கு தயாராவோர் உட்பட தினமும் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து புத்தகங்கள் படிப்பது வழக்கம். 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலகத்தில் கழிப்பறை , குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படாமல் உள்ளதாக இந்த நூலகத்திற்கு அன்றாடம் வந்து செல்லும் வாசகர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

மதுரை மத்திய நூலகம்

மத்திய அரசின் யு.பி.எஸ்.சி, ரயில்வே தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசின் குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அரசுப்பணி தேர்வுகளுக்கு வெளியில் பணம் கட்டி படிக்கமுடியாத பல மாணவ, மாணவிகள் இந்த மதுரை மத்திய நூலகத்திற்கு வந்து இங்குள்ள புத்தகங்களை உபயோகித்து தங்களை தேர்விற்கு தயார் செய்கின்றனர்.

மதுரை மைய நூலகம்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்நூலகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் அமைந்துள்ள கழிப்பறைகள் முறையான பராமரிப்பின்றி சுகாதாரம் இழந்து கூரைகள் பெயர்ந்து ஆபத்தான முறையில் காட்சியளிக்கிறது. மேலும் இந்த நூலகத்தில் குடிநீர் வசதியும் இல்லாமல் குடிநீர் குழாய்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் 7 முதல் 10 நபர்கள் வரை பணிபுரிய வேண்டிய இந்த நூலகத்தில் 4பேர் மட்டுமே பணிபுரிகின்றனர்.

மதுரை மைய நூலகம்

பொது நூலகத்திட்டம் என்பது சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு உன்னத திட்டமாகும், அப்படியாகபட்ட திட்டத்தை அரசு முறையாக கவனித்து இவ்வாறான பிரச்சினைகளை உடனடியாக கருத்தில் கொண்டு சரி செய்யவேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai