ஹோம் /மதுரை /

ஏழை குடும்பத்தினரும் அரசு அதிகாரியாகலாம்.. இளந்தாரிகளை செம்மைப்படுத்தும் மதுரை மத்திய நூலகம்..

ஏழை குடும்பத்தினரும் அரசு அதிகாரியாகலாம்.. இளந்தாரிகளை செம்மைப்படுத்தும் மதுரை மத்திய நூலகம்..

மதுரை

மதுரை மத்திய நூலகம்..

Madurai Central Library | மதுரை மாநகரின் மைய பகுதியான சிம்மக்கல்லில் அமைந்துள்ள இந்த பொது நூலகத்தில் தினமும் நூற்றுகணக்கான மக்கள் வந்து தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு செல்கின்றனர். மதுரையை சார்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரும் தாங்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்கு இந்த நூலகத்தையே முதல் காரணமாக கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

இன்றைய தலைமுறை மாணவ, மாணவிகள் மத்தியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், குரூப் 1, குரூப் 2 அதிகாரிகள் போன்று தாமும் அரசு துறையில் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணம் பெரிதளவில் எழுந்துள்ளது. ஆனால் அதற்கு புத்தகம் வாங்கி படிக்கும் அளவிற்கோ, கோச்சிங் செண்டர் சேரும் அளவிற்கோ வசதி பெரும்பாலானவர்களிடம் இல்லை. எனவே இவர்கள் இலவசமாக படித்து முன்னேறவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சார்பில் பல திட்டங்கள் செயலில் உள்ளன. அவற்றில் முக்கியமானவை அரசின் பொது நூலகங்கள்.

தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பொது நூலகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் நூலகங்கிளில் ஒன்று தான் நாம் தற்போது பார்க்க கூடிய இந்த மதுரை மத்திய நூலகம்.

மேலும் படிக்க:  மதுரை நகர அமைப்பை விவரித்து போற்றும் சங்க பாடல் உங்களுக்கு தெரியுமா? 

மதுரை மாநகரின் மைய பகுதியான சிம்மக்கல்லில் அமைந்துள்ள இந்த பொது நூலகத்தில் தினமும் நூற்றுகணக்கான மக்கள் வந்து தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு செல்கின்றனர்..

மதுரையை சார்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரும் தாங்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்கு இந்த நூலகத்தையே முதல் காரணமாக கூறுகின்றனர். அந்த அளவிற்கு சிறப்பு பெற்ற இந்நூலகம் இன்று வரை அதன் பொலிவை இழக்காமல் பலரும் வந்து படித்து செல்லும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட  தலைப்புகளில் முப்பதாயிரத்திற்க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகமாக இயங்கி வருகிறது.

மேலும் படிக்க :  மதுரை மாநகரில் இத்தனை ஹிட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா...!

இந்த நூலகத்தில் மதுரை வாசிகள் மட்டுமல்லாது மதுரையை சுற்றியுள்ள வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து பலரும் வந்து படித்துவிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai