முகப்பு /மதுரை /

திருப்பரங்குன்றத்தில் விமர்சையாக நடைபெற்ற முருகன் தெய்வானை திருக்கல்யாணம்..

திருப்பரங்குன்றத்தில் விமர்சையாக நடைபெற்ற முருகன் தெய்வானை திருக்கல்யாணம்..

X
முருகன்

முருகன் தெய்வானை திருக்கல்யாணம்

Madurai News | திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை ஆசிர்வாதத்துடன் முருகப்பெருமான் மற்றும் தெய்வானைக்கு மேளதாளம் முழங்க மாபெரும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாநகரில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் சிறப்பு பெற்றது. அதில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றுதான் முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சூப்பர் நியூஸ் சாமி திருக்கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா.

இத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் 12 நாளில் முருகப்பெருமான் மற்றும் தெய்வானைக்கு மீனாட்சி அம்மன் ஆசீர்வாதத்தால் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முருகப்பெருமான் மற்றும் தெய்வானைக்கு அதிகாலையில் பல வகையான அபிஷேபிஷேகங்கள் செய்யப்பட்டு அழகிய கல்யாண கோலத்தில் 6 கால் மண்டபத்தில் சுமார் 12.30 மணி அளவில் திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக எழுந்தருளினார்.

முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரருடன் பிரியாவிடை காலையில் திருமண நிகழ்ச்சிக்காக கோவிலிலிருந்து புறப்பாடாகி வரும் வழியில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, மண்டபங்களில் காட்சியளித்து பின்பு திருப்பரங்குன்றத்திற்கு வந்தடைந்தனர்.

இதையும் படிங்க : ஹோமியோபதி மருத்துவத்தில் இத்தனை சிறப்புகள் இருக்கா? - விவரிக்கும் நெல்லை மருத்துவர்!

திருப்பரங்குன்றத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் மேளம் தாளம் முழங்க மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பின் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஆசீர்வாதத்துடன் முருகப்பெருமான் மற்றும் தெய்வானைக்கு கங்கணம் கட்டி மூன்று முறை மாற்றி மாற்றி, மேல தாளங்கள் முழங்க மாபெரும் திருக்கல்யாணம் வைபவம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துகல்யாண கோலத்தில் இருந்து முருகப்பெருமான் மற்றும் தெய்வானையை தரிசனம் செய்தனர்.

    First published:

    Tags: Local News, Madurai