ஹோம் /மதுரை /

அந்த மனசு தான் சார் கடவுள்..!! ஊழியருக்காக மதுரை பெட்ரோல் பங்க் ஓனரு செய்த காரியத்தை பாருங்க..

அந்த மனசு தான் சார் கடவுள்..!! ஊழியருக்காக மதுரை பெட்ரோல் பங்க் ஓனரு செய்த காரியத்தை பாருங்க..

மதுரை

மதுரை

Madurai Petrol Bunk | வாகனங்களுக்கு குனிந்து காற்றடிக்க வேண்டிய தேவையின்றி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் ஊழியர்களின் வசதிக்காக விஷேச ஏற்பாட்டினை செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

பெட்ரோல் பங்க்-களில் வாகனத்தின் டயர்களில் காற்று நிரப்பும் பம்புகள் அமைக்கப்பட்டு இலவசமாக காற்று நிரப்பப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். காற்று நிரப்புவதற்காக வரிசைகட்டி நிற்கும் வாகனங்களுக்கு ஊழியர்கள் குனிந்து காற்று அடிப்பது நாம் அன்றாடம் காணும் காட்சிகளுள் ஒன்று.. ஆனால் மதுரையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்று ஊழியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு விஷேசமான ஏற்பாடுகளை தங்களின் பெட்ரோல் பங்கில் செய்து கொடுத்திருக்கின்றனர். அப்படி என்ன விஷேசம் என்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம்..

மதுரை கோரிப்பாளையத்தை அடுத்துள்ள எக்கோ பூங்கா பின்புறம் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்-ல் தான் இந்த விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:  மதுரை மாநகரில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களின் சிறப்புகள் தெரியுமா?

வாகனங்களின் டயர்களில் காற்று நிரப்பும் ஊழியர் ஒவ்வொரு முறையும் குனிந்து காற்றடிப்பதை தவிர்க்க தங்களது பங்கில் ஊழியர் நிற்கும் அளவுக்கு தாழ்வாக்கப்பட்டுள்ளது. ஊழியர் இந்த பகுதியில் நின்றால் அது வாகனத்தின் டயருக்கு ஈடாக இருக்கும்.

இதன் மூலம் ஒவ்வொரு முறையும் காற்றடிகும்போது குனிந்து காற்றடிக்க வேண்டிய தேவை இல்லாமல் இந்த குழிக்குள் சென்று டயர்களுக்கு சமமான தளத்தில் நின்று, நிமிர்ந்த படியே காற்றடிக்கும் வசதியை ஊழியர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் இந்த பங்க்-ன் உரிமையாளர்  அருண் குமார் அவர்கள்.

பெட்ரோல் பங்கில் சிறப்பு ஏற்பாடு

இருசக்கர வாகனங்களில் முன் சக்கரத்துக்கு 30 என்ற அளவும், பின்பக்க சக்கரத்துக்கு 40 என்ற அளவும் தான் பெரும்பாலும் காற்று அளவு வைக்கப்படும். இதன் காரணமாக இரண்டு காற்றடிக்கும் இயந்திரங்களை இந்த தாழ்வான பகுதியில் நிறுவியுள்ள பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர், இதில் ஒன்றில் முன்சக்கரத்துக்கு தகுந்த 30 என்ற அளவையும், மற்றொன்றில் பின்சக்கரத்துக்கு தகுந்த 40 என்ற காற்றின் அளவையும் By Default ஆக அமைத்துள்ளனர்.

மேலும் படிக்க:  மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்த சிறப்புமிக்க சிவாலயம் இதுதான்..

இதன் மூலம் காற்று நிரப்பும் ஊழியரின் பனிச்சுமை குறைவதுடன் வாடிக்கையாளர்களும் விரைவாக காற்றை நிரப்பிச் செல்ல முடியும் இதன் மூலம் அவர்களின் காத்திருக்கும் நேரமும் மிச்சமாகிறது.

குனியத்தேவையின்றி நின்று கொண்டே காற்று நிரப்பும் ஊழியர்..

காற்றடிக்கும் பம்ப் குழியில் நின்று வாகனங்களுக்கு காற்றடிப்பவருக்கு வெயிலின் தாக்கம் தெரியாதிருக்க இரண்டு மின் விசிறிகளும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த பங்கின் உரிமையாளர்  அருண் குமாரிடம் பேசியபோது,    முதன் முதலில் இப்படியொரு வசதியை கோயம்புத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-ல் கண்டதாகவும் ஆனால் அதில் இங்குள்ளதை போன்ற வசதிகள் இருக்கவில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் ஊழியர்களின் பனிச்சுமையை குறைக்கும் வகையிலான இந்த கான்செப்டை புரிந்து கொண்டு அதில் பல அம்சங்களை கூடுதலாக சேர்த்து  தங்களுடைய   ஊழியர்களுக்காக தங்களின் பெட்ரோல் பங்கில் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும்  தெரிவித்தார்.

இதையும் படிங்க:  மதுரையில் மட்டுமே கிடைக்கும் முள்ளு முருங்கை கீரை வடை சாப்பிட்டிருக்கீங்களா? - எங்க கிடைக்கும்?

ஓனருக்கு ஒரு சபாஷ்..!

வேலையை மட்டுமே பிரதானமாக கருதும் பல நிறுவனங்கள் இன்றைய காலகட்டத்தில்  தங்கள் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையே செய்து கொடுக்க முன்வருவதில்லை. ஆனால், தனது ஊழியர்களின் உடல்நலனை முதன்மையாக கருதி அவர்கள்  உற்சாகமாக பணிபுரிய வேண்டும் என்ற நோக்கில் இப்படியொரு வசதியை செய்து கொடுத்துள்ளார் இந்த பெட்ரோல் பங்க் இன் உரிமையாளர்.. இவரின் இந்த மனிதநேய முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது. மேலும் இது போன்ற அமைப்பை பிற பெட்ரோல் பங்க் நிர்வாகங்களும் பின்பற்றும்பட்சத்தில் ஊழியர்களுக்கு முதுகுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படாதவாறு தவிர்க்கலாம்...

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai