Home /madurai /

மதுரையில் நாளை (ஆக 11) மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா?

மதுரையில் நாளை (ஆக 11) மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா?

மதுரையில் நாளை மின் தடை

மதுரையில் நாளை மின் தடை

Madurai Power Cut Areas :  மதுரை மாவட்டம் புதூர் அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று  சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ்  தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
    மதுரை மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 11)  மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (ஆகஸ்ட் 11ம் தேதி ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி   நாளை   நடைபெற உள்ளதால் மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

    ஆகையால், நாளை (ஆக 11) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதூர் அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    உசிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டனபட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிகல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்தகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், பாலமேடு நகர் பகுதிகள், அலங்காநல்லூர் நகர் பகுதிகள், சர்க்கரை ஆலை, பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Madurai, Power cut

    அடுத்த செய்தி