கீழடி என்ற ஒரு சொல் ஒட்டுமொத்த இந்தியாவையே ஆச்சரியப்படுத்த செய்துள்ளது. சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான அதாவது கி.மு. 5 அல்லது 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்முடைய சங்க கால மக்களின் வாழ்க்கை வரலாறு புதைந்து இருந்ததை தோண்டி, உலகத்திற்கே வெளிச்சம் போட்டு காட்டிய இடம் தான் பெருமைமிக்ககீழடி கிராமம். இந்த கீழடி கிராமம் மதுரையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. விரகனூர் ரிங் ரோடு வழியாகச் சென்றால் சிலைமான் அடுத்துள்ள பகுதியான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீழடி கிராமம் வந்துவிடும். இந்த கீழடி கிராமத்தில் தான் அகழாய்வு செய்யப்பட்ட பகுதியும், கீழடி அருங்காட்சியகமும் உள்ளது.
கீழடி அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள,சங்க கால மக்களின் பொருட்களை எப்படி எல்லாம் தோண்டி எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகவே முதலில் கீழடி அகழாய்வு செய்யப்பட்ட பகுதிக்கு சென்றோம். நம்முடைய சங்க கால மக்கள் வாழ்ந்த பகுதியை ரசித்துக்கொண்டே பைபாஸில் இருந்து ஒரு கிலோமீட்டர் சென்றால் கீழடி அகழாய்வு செய்யப்பட்ட இடத்திற்கான பாதை வந்துவிடும்.
இந்தப் பாதை வழியாக சென்றால் முழுக்க முழுக்க பசுமைநிறைந்த தென்னந்தோப்புகள் காட்சியளிக்கின்றது. இந்தத் தென்னந்தோப்பு பகுதிகளில் தான் முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம்மூன்றாம் கட்டம் எனஎட்டு கட்ட அகழ் ஆராய்ச்சி பணிகள் நடந்ததாக கூறப்படுகின்றது. அதில் ஒரு பகுதியை மட்டும் தற்பொழுது பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்கள் மற்ற பகுதிகளை மூடிவிட்டதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க : திருச்செந்தூர் - நெல்லை ரயில் பயண நேரம் குறைகிறது.. மகிழ்ச்சியில் பயணிகள்!
இந்த கீழடி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்திற்கு அனுமதி இலவசம் என்பதால், சிரமம் இன்றி, உள்ளே சென்றோம். அங்கு அகழ் ஆராய்ச்சி செய்ய தோண்டப்பட்ட சதுர வடிவ 8 குழிகள் காணப்பட்டன.8 குழிகள் குழியுமே 20 அடி ஆழத்தில் தோண்டப்பட்டு இருந்ததால் பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் இருந்தது. ஒவ்வொரு குழியிலையுமே நம்ம சங்க கால மக்கள் பயன்படுத்திய பானைகள், பானை ஓடுகள், மண்ணில் புதைந்த பெரிய பானைகள் காணப்பட்டன.
மேலும் ஒரே ஒரு குழியில் மட்டும் ஆறு அடுக்குக் கொண்ட உறைகிணறு மண்ணோடு மண்ணாய் புதைந்த மாதிரி காணப்படுகின்றது. ஒவ்வொரு குழியையும் பார்க்க பாதை போட்டு இருப்பதால்,நடந்து போய் பார்ப்பதற்கு வசதியாகவும்,மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இப்படி இங்கு தோண்டப்பட்ட இடம் மாதிரி தான் இப்பகுதியில் எட்டு கட்ட அகழ் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, தோண்டப்பட்டு சங்க கால மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையிலும்அவர்கள் பயன்படுத்திய பொருட்களை மக்களுக்கு காட்சிப்படுத்தக் கூடிய வகையிலும்,அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்திற்குஅருகிலேயேஇ தமிழ்நாடுஅரசு சார்பாக கீழடி அருங்காட்சியகம்அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai