ஹோம் /மதுரை /

நீங்கள் புத்தக பிரியரா? மதுரைல உங்களுக்காகவே ஒரு இடம் இருக்கு...

நீங்கள் புத்தக பிரியரா? மதுரைல உங்களுக்காகவே ஒரு இடம் இருக்கு...

மதுரை

மதுரை ஜெயம் புத்தக கடை

Madurai Book Shop | மதுரை மாநகரின் மைய்பகுதியான கீழஆவணி மூல வீதியில் அமைந்துள்ள கடை தான் ஜெயம் புக் சென்டர். 1960களில் புது மண்டபத்தில் சிறியளவில் புத்தக கடையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்களை இருப்பு வைத்திருக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் கடந்த மாதம் 23ம் தேதி முதல் கடந்த ஆக்டோபர் 3ம் தேதி வரை தமிழ்நாடு அரசு சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது அனைவருமே அறிந்த ஒன்று தான்....

இந்த புத்தக திருவிழா நடந்து முடிந்த பின் மதுரையில் வசிக்கும் பலருக்கும் புத்தக கண்காட்சியை விட்டால் வேறு எங்கும் இந்த அளவிலான புத்தகங்களை பார்க்க முடியாது என்ற எண்ணம் இயல்பாகவே எழும்..ஆனால் அது நிச்சயமாக உண்மையல்ல.

மதுரை மாநகரின் மைய்பகுதியான கீழஆவணி மூல வீதியில் அமைந்துள்ள கடை தான் ஜெயம் புக் சென்டர்.

1960களில் புது மண்டபத்தில் சிறியளவில் புத்தக கடையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்களை இருப்பு வைத்திருக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றது.

மேலும் படிக்க:  திருச்சியில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள்...! இங்கு இவ்வளவு சிறப்புகளா...!

மக்கள் தற்போது அதிகமாக விரும்பும் நாவல் புத்தகமான பொன்னியின் செல்வன், வேள் பாரி, மகாபாரதம் மேலும் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், அரசியல் புத்தகங்கள் உள்ளிட்ட 50,000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உள்ள புத்தகங்கள் இந்த கடையில் விற்கப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த கடையின் இரண்டாம் தலைமுறை உரிமையாளராக உள்ள ஆனந்த் அவர்கள் நம்மிடம் பேசுகையில் இந்த கடை முதன் முதலில் அவரது தந்தையால் புது மண்டபத்தில் பள்ளி புத்தகங்கள். விற்கப்படும் கடையாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின்னர் அதில் கிடைத்த வருவாய் மூலம் சிறிது சிறிதாக வளர்ந்த 2009ல் தனி இரண்டடுக்கு மாடி கடையாக ஆரம்பித்து இன்று வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai