ஹோம் /மதுரை /

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா - 6ம் தேதி லட்ச தீபம் ஏற்ற ஏற்பாடு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா - 6ம் தேதி லட்ச தீபம் ஏற்ற ஏற்பாடு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Madurai District | மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. கார்த்திகை தீபம் தினத்தன்று லட்ச தீபங்கள் ஏற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக போற்றப்படுகிறது. அக்னி ரூபமாய் போற்றப்படும சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகன் என்று கூறப்படும் முருகனுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் இருப்பதாக கூறி பக்தர்கள் போற்றுகின்றனர்.

பொதுவாக விளக்கேற்றி வைத்தல் என்பது மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கங்களுள் ஒன்று. அந்த வவையில், கோவில்களிலும் வீடுகளிலும் நாள்தோறும் விளகேற்றுவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக தீபங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அந்த வகையில், சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில், கார்த்திகை தீபத்திருநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆண்டின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கார்த்திகை மாத திருவிழா வருகிற 1 ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1 ஆம் தேதி காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

Must Read :அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

இந்த விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவின் முக்கிய நாளான 6 ஆம் தேதி கார்த்திகை தீபதினத்திருநாளன்று மாலையில், கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்கிறார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கிரீடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Temple