ஹோம் /மதுரை /

மதுரை பழமுதிர்சோலையில் கந்தஷஷ்டி விழா - சூரசம்ஹாரம் எப்படி வந்தது தெரியுமா?

மதுரை பழமுதிர்சோலையில் கந்தஷஷ்டி விழா - சூரசம்ஹாரம் எப்படி வந்தது தெரியுமா?

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

Pazhamudhircholai Surasamharam : மதுரையில் உள்ள முருகப்பெருமானின் படைவீடாகிய பழமுதிர்சோலையில், சூரசம்ஹாரம் விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

காசியப்ப முனிவருக்கும் மாயைக்கு மகனாக பிறந்தார் சூரபத்மன். இவர் வளர்ந்த பிறகு, சிவ பெருமானை நோக்கி தவமிருந்தார். இதன் பயனாக இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணின் வயிற்றில் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்னும் வரத்தையும் சிவ பெருமானிடம் இருந்து பெற்றார்.

இப்படி பெற்ற வரத்தை வைத்துக் கொண்டு தேர்வகளுக்கும் நல்ல உயிர்களையும் கடும் தொல்லையாக மாறி துன்ப செயல்களை செய்து வந்தார் சூரபத்மன். இவனை அழிக்க தேர்வர்கள் கேட்டுக்கொண்டதால், மனம் இறங்கிய சிவ பெருமானின் ஆறு முகங்களிலிருந்து ஆறு நெருப்பு பொறிகளில் வந்தன.

அதை வாயு பகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தன. பார்வதி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம் வேலைப் பெற்ற முருகன், திருச்செந்தூரில் சூரபத்மனை போரில் அழித்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வே பின்னாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் ஒன்றாகிய சோலைமலை (பழமுதிர்சோலை) முருகன் கோவிலில், சூரசம்ஹாரத்தை கொண்டாடும் கந்தசஷ்டி திருவிழா, தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி வள்ளி தெய்வானையுடன் உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக்குடத்தால் பாலாபிஷேகம், மற்றும் பன்னீர், பழம், தேன், சந்தனம், தீர்த்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேமுகம், மகா தீபாராதனைகளும் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்களின் மந்திரங்களுடன் நடந்தது.

அதன் தொடச்சியாக, 27ஆம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மாலை 3 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறும். 28ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், பிற பூஜைகளும் நடைபெறும். 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சப்பர வாகனமும், பின்னர் சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

Must Read : பொள்ளாச்சி ‘சூர்யவம்சம்’ வீட்டில் ஷூட் செய்யப்பட்டு மாபெரும் ஹிட்கொடுத்த படங்களின் லிஸ்ட்!

அதனைத் தொடர்ந்து, சூரசம்ஹார விழா 30ஆம் தேதி காலையில் மகா அபிஷேகத்துடன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும், மாலை 4.30 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்வும் நடைபெறும். பின்னர் 5.30 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெறும்.

சூரசம்ஹாரம்

அப்போது, சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடாகி, திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து தல விருட்ஷமான நாவல் மரத்தடியில், பத்மா சூரனையும் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனையும் நடைபெறவுள்ளது. பின்னர் ஒளவைக்கு (சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு) நாவல் கனி கொடுத்தல் நிகழ்வு நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மறுநாள் 31ஆம் தேதி காலையில் திருக்கல்யாண உற்சவமும், பகல் 1 மணிக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் உற்சவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, திருப்பாவாடை தரிசனம், பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறு திருவிழா நிறைவு பெறும்.

Published by:Suresh V
First published:

Tags: Festival, Local News, Madurai, Murugan