Home /madurai /

Madurai | திருஞானம் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி

Madurai | திருஞானம் தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி

மதுரை பள்ளி

மதுரை பள்ளி

Madurai | காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருஞானம் பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை கீழச்சந்தைபேட்டை நாடார் உறவின்முறைக்கு சொந்தமான அரசு உதவி பெற்று இயங்கிவரும் திருஞானம் துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மதுரை கீழச்சந்தைபேட்டை நாடார் உறவின்முறை சார்பில் இவ்விரு பள்ளிகளிலும் வருடா வருடம் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கென சிறப்பு நிகழ்வுகள் நடத்துவது வழக்கம். அந்த முறையில் இந்த ஆண்டுக்கான காமராஜர் பிறந்தநாள் நேற்று (15/07/2022) கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கீழ சந்தைபேட்டையில் உள்ள கே.வி.துரையப்ப நாடார்- தேனம்மாள் சிறுவர்கள் பள்ளியில் உள்ள காமராஜர் சிலைக்கு பள்ளி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பின்னர் பள்ளி குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அப்பள்ளி சிறுவர், சிறுமிகள், காந்தி, பாரதியார், ராணுவ வீரர் வேடமணிந்து ஆர்வத்துடன் காமராஜரின் வாழ்வு மற்றும் வரலாறு குறித்து உரையாற்றினர்.

பேச்சுப் போட்டியில் குழந்தை


 

கீழச்சந்தபேட்டை நாடார் உறவின்முறை தலைவர் சண்முகநாதன் பேசும்போது, ‘காமராஜர் தமிழகத்திற்கு கிடைத்த ஒப்பில்லா தலைவர். அவரின் எளிமையான வாழ்கை நாம் அனைவரும் அவரிடம் இருந்து கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும். மேலும் அவர் ஆட்சிகாலத்தில் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தான் இன்று தமிழகத்தை பல ஆண்டுகாலம் முன் நோக்கி கொண்டு சென்றிருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.

மாறுவேட போட்டியில் சிறுவன்


பிறகு அதற்கு அருகாமையில் அமைந்திருக்கும் திருஞானம் மேல்நிலை பள்ளியில் இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அங்கு பயிலும் மாணவர், மாணவிகளுக்கு நிர்வாகிகள் சண்முகநாதன், மோகன் ராஜ், சுரேந்தர் பாபு, சதீஷ் குமார் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சார்பில் இலவச பள்ளி சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி